நீதியின் கிரகம் சனி ஆகும். சனிபகவானே நவக்கிரகங்களில் மிக தொலைவில் இருக்கும் தெய்வம் ஆகும். இவர் இராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு 30 வருடங்கள் தேவைப்படுகிறது.
அதாவது ஒருவரது வாழ்நாளில் சனி பகவான் மூன்று முறை வலம் வருகின்றார். முதல் 30 வருடத்திற்குள் ஒரு முறை, 60 வருடத்திற்குள் இரண்டாவது முறையும், 90 வருடத்திற்குள் மூன்றாவது முறையும் சனி பகவானின் வலம் வருதல் நிகழ்வானது நடைபெறுகிறது.
Table of Contents
பொங்கு சனி என்றால் என்ன
சனிபகவானின் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும். அதாவது, இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, மனதை பொங்கச் செய்வதே, பொங்கு சனி ஆகும். இது ஒருவரின் 31 வயது தொடக்கம் 60 வயது வரையான காலப்பகுதி ஆகும்.
பொங்கு சனியன் தாக்கம்
பொங்கு சனியானது ஒருவரது வாழ்வில் 31 வயது தொடக்கம் 60 வயதுக்குள் ஏற்படுகிறது. பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகம் சனிபகவான் பீடிக்கின்றார். இக்காலங்களில் ஒருவருடைய வாழ்வில் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன.
- படித்து முடித்து தொழில் புரியும் நபர்கள், இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்களை அதீத சிக்கலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- உத்தியோகத்தில் சிறுப்பிரச்சனைகள், மனக்கசப்புகள், விரக்தி என்பவை ஏற்படும்.
- குடும்பத்தினருடன் சுற்றத்தாருடனும் பல சங்கடங்கள் ஏற்படும்..
- சுகபோக வாழ்க்கையை பெரிதென கருதி அதிலே அதிக ஆர்வத்தை செலுத்த வைக்கும்.
- சொந்த வீடு கட்டுதல், சொந்த வணிகம் ஆரம்பித்தல் போன்றவற்றில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.
பொங்கு சனி தாக்கத்தை குறைப்பதற்கான வழிகள்
பொங்க சனி ஏற்பட்டு முதல் ஐந்து ஆறு வருடங்களுக்கு அதிக துன்பத்தை தந்தாலும் கடைசி ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு சனி பகவான் சிறந்த நல்ல எண்ணங்களை கொண்டு காணப்படுபவர்களுக்கு நல்ல பலன்களை வழங்குகின்றார்.
சனி பகவானின் வீரியத்தை குறைத்து சிறந்த பலனை பெறுவதற்கு பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் வேண்டும்.
- சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று அங்குள்ள நவக்கிரகங்களில் காணப்படும் சனி பகவானை பூசித்து அர்ச்சனைகள் செய்தல் வேண்டும்.
- சனிபகவானுக்கு எள் எண்ணெய் எரித்தல் வேண்டும்.
- தினமும் இறைவழிபாடு செய்தல் வேண்டும்.
- விசேட பூஜைகள், தனிப்பட்ட பூஜைகள் என்பவற்றையும் ஆற்றலாம்.
- தியான பயிற்சிகள் என்பவற்றை மேற்கொள்ளல்.
சனிபகவான் ஆரம்ப காலத்தில் பல துன்பங்களை கொடுத்தாலும் ஒரு மனிதனை சிறந்த முறையில் ஆற்றுப்படுத்துகின்றார்.
ஏனைய கிரகங்களை விட அதிக காலம் ஒரு மனிதனுடன் தன் பயணத்தை மேற்கொண்டு ஒரு மனிதனை சிறந்த முறையில் நல்ல பிரஜையாக மாற்றுவதற்கு பாரிய பல பணிகளை சனி பகவான் ஆற்றுகின்றார்.
Read more: சனி பகவான் வழிபடும் முறை