பெரிய வியாழன் என்றால் என்ன

periya viyalan in tamil

பெரிய வியாழன் என்றால் என்ன

பெரிய வியாழன் என்றால் என்ன

இயேசு கிறிஸ்து வாழ்ந்த இறுதி நாட்களை நினைவுக் கூறும் முக்கிய நிகழ்வுகளில் பெரிய வியாழன் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக காணப்படுகின்றது.

இந்நாளில் இயேசு தான் இறப்பதற்கு முதல் நாள் தம் சீடர்களுடன் இரவுணவு உண்ட தினத்தை நினைவுக் கூறும் நாள் பெரிய வியாழன் ஆகும்.

அன்றைய நாள் இயேசு இறுதி இரவுணவு அருந்திய நிகழ்வு, இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுதல் மற்றும் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் கிறிஸ்தவர்களால் நினைவு கூறப்படுகின்றது.

இயேசு இறுதி இரவுணவு அருந்திய நிகழ்வு

பாஸ்கா விழாவினை தம் சீடர்களோடு சேர்ந்து கொண்டாடும் பொழுது அப்பத்தை கையில் ஏந்தி இறை பிரார்த்தனை செய்து அப்பத்தை பிரித்து தம் சீடர்களுக்கு கொடுக்கும் போது “இது எனது உடல்” என்று கூறினார்.

இரச கிண்ணத்தை எடுத்து “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்” என்றார். சீடர்கள் ஆண்டவர் இயேசுவினால் தமக்கு தந்த அப்பத்தையும், இரசத்தையும் உண்டனர்.

இயேசு தம் சீடர்களின் பாதத்தைக் கழுவும் நிகழ்வு

இயேசு தம் சீடர்களின் மரியாதைக்கும் நற் பண்புக்கும் எடுத்துக் காட்டாக திகழ்பவர். ஆனால் இங்கு இயேசு தனக்கு தொண்டு செய்பவர்களின் பாதத்தை கழுவியுள்ளார்.

இச்செயல் மூலம் ஒருவருக்கு ஒருவர் வேற்றுமை பாராது பணிகள் செய்ய வேண்டும் என மறைமுகமாக தம் சீடர்களுக்கு உணர்த்துகின்றார்.

இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்

இயேசு குருத்தவத்தை ஏற்படுத்தல் என்றால் இயேசு எவ்வாறு தம் சீடர்களுக்கு அப்பதை உண்ண கொடுத்தோரோ அதே போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருவானவர் தம் அணைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் அப்பம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

விதிமுறைகள்

கத்தோலிக்க திருச்சபை விதிமுறைகளுக்கமைய தம் மக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் அன்றைய தினம் தடை செய்யப்படும். மாலை வேலையில் இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும்.

மக்களின் நலன் கருதி ஆயர் தேவாலயத்தில் மாலையில் அல்லது அவசியம் என கருதும் பட்சத்தில் கூட்டுத்திருப்பலி ஏற்படுத்தப்படலாம்.

Read more: புனித வெள்ளி என்றால் என்ன