பெயரெச்சம் வினையெச்சம் என்றால் என்ன

எச்சம் என்றால் என்ன

இந்த பதிவில் எச்சத்தின் வகைகளான பெயரெச்சம் வினையெச்சம் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

எச்சம் என்றால் என்ன

ஒரு சொல்லோ சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் நின்றால் எச்சம் எனப்படும். அதாவது முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் ஆகும்.

எச்சம் என்பது இரண்டு வகைப்படும்.

  1. பெயரெச்சம்
  2. வினையெச்சம்

பெயரெச்சம் என்றால் என்ன

முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். இது “” என்ற விகுதியைக் கொண்டு முடியும்.

அதாவது ஓர் எச்ச வினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் ஆகும்.

இந்த பெயரெச்சம் 3 காலங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு:-
இறந்தகால பெயரெச்சம் – வந்த மாணவன்
நிகழ்கால பெயரெச்சம் – வருகின்ற மாணவன்
எதிர்கால பெயரெச்சம் – வரும் மாணவன்

பெயரெச்சம் உதாரணம்

படித்த மாணவன் (படித் = த்+அ)

படித்த – எச்ச வினை (முற்றுப்பெறாத வினைச்சொல்)
மாணவன் – பெயர்ச்சொல்
– அ விகுதி

  1. நடந்த கிழவன்
  2. வாழ்ந்த மன்னன்
  3. வந்த தலைவர்
  4. ஓடிய குழந்தை
  5. செய்த மாணவன்

பெயரெச்சம் வகைகள்

  1. தெரிநிலை பெயரெச்சம்
  2. குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய 6 யும் உணர்த்தி பெயர்ச்சொல்லை கொண்டு முடிந்தால் அது தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.

அ, உம்” ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலை பெயரெச்சத்தில் காணப்படும்.

தெரிநிலை பெயரெச்சம் எடுத்துக்காட்டு:

படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்

குறிப்பு பெயரெச்சம்

காலம், செயலை உணர்த்தாமல் பண்பின் அடிப்படையில் பொருள் உணர்த்தி பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சம் குறிப்பு பெயரெச்சம் ஆகும்.

குறிப்பு பெயரெச்சம் “” என்ற விகுதியை பெற்று வரும்.

குறிப்பு பெயரெச்சம் எடுத்துக்காட்டு:

நல்ல பையன்
அழகிய மலர்
பெரிய வீடு
கரிய யானை

எதிர்மறை பெயரெச்சம்

பெயரெச்சம் எதிர்மறையான பொருள் தருமாயின் அது எதிர்மறை பெயரெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

ஓடாத வண்டி
படிக்காத பையன்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈற்று எழுத்து கெட்டு வரும் எதிர்மறை பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

” விகுதியில் முடிவு பெறும்.

எடுத்துக்காட்டு:

வாடாத மலர்
எண்ணிலா உயிர்கள்
தேரா மன்னன்
செல்லா இடத்து

வினையெச்சம் என்றால் என்ன

முற்றுப் பெறாத ஒரு எச்சம் வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சம் எனப்படும். இது “உ, இ” என்ற இரண்டு விகுதியைக் கொண்டு முடியும்.

அதாவது ஒரு எச்ச வினை வினைச்சொல்லை (வினைமுற்று) கொண்டு முடிவது வினையெச்சம் ஆகும்.

இந்த வினையெச்சம் 3 காலங்களிலும் வரும்.

வினையெச்சம் உதாரணம்

படித்து முடித்தான்
ஓடி வந்தான்
வந்து செல்வான்

  1. நடந்து வந்தான்
  2. வாழ்ந்து சென்றான்
  3. படித்து முடிப்பான்
  4. வந்து செல்கிறான்

வினையெச்சம் வகைகள்

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. குறிப்பு வினையெச்சம்
தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும் செயலையும் உணர்த்தி வினைமுற்றினை கொண்டு முடியும் எச்ச வினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

படித்துப் பார்த்தான்
படிக்கச் செல்கிறான்
எழுந்து வந்தான்

குறிப்பு வினையெச்சம்

பண்பின் அடிப்படையில் பொருள் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

மெல்ல நடந்தான்
நோயின்றி வாழ்ந்தான்

முற்றெச்சம் (முற்று+எச்சம்)

ஒரு வினைமுற்றுச் சொல் வினையெச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

அதாவது முற்றாக இருக்கும் சொல் எச்சப் பொருளில் வழங்குவது.

எடுத்துக்காட்டு:

ஓடினன் வீழ்ந்தான்
படித்தனன் தேறினான்
எழுதினன் முடித்தான்

எதிர்மறை வினையெச்சம்

வினையெச்சம் எதிர்மறை பொருளில் வந்தால் எதிர்மறை வினையெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

நில்லாது சென்றான்
உண்ணாது இருந்தான்

You May Also Like:

குற்றியலிகரம் என்றால் என்ன

குற்றியலுகரம் என்றால் என்ன