பூண்டு ஒரு சிறந்த உணவாக மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இதை பச்சையாக சாப்பிட்டாலும் அதிக நன்மை கிடைக்கும்.
பூண்டு மருத்துவ பயன்கள்
#1. வாயு கோளாறைப் போக்க சிறந்த மருந்தாகும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் வெள்ளை பூண்டு பனைவெல்லம் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும். அல்லது பசும்பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
#2. மார்புச்சளியை போக்கும்.
மார்புச்சளி உள்ளவர்கள் கால் டீஸ்பூன் கடுகு, மூன்று வெள்ளைப்பூண்டு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி நெஞ்சுப் பகுதியில் தடவி வந்தால் மார்புச்சளி நீங்கும்.
#3. உடல் எடையை குறைக்க உதவும்.
மூன்று மிளகு, சிறிதளவு பூண்டு இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் பருமன் குறையும்.
#4. காது வலியைக் குணப்படுத்தும்.
நல்லெண்ணெயில் பூண்டு பத்து பல் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து அதன்பின் அந்த எண்ணையை சிறிதளவு காதுகளில் விட்டால் காது வலி குணமாகும்.
#5. வெட்டுக்காயம் அல்லது அடிபட்ட காயம் ஏற்பட்டால் அதை விரைவில் குணப்படுத்தும்.
காயத்தை சுத்தம் செய்த பின்னர் வெள்ளைப்பூண்டு சுண்ணாம்பு இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து காயத்தின் மேல் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.
#6. காது இரைச்சல், காதில் சீழ் வடிதல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
#7. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வாய்வு பிடிப்பு ஏற்படுகின்றது. இதனைச் சீர்செய்ய பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
#8. முகப் பருவைக் குணமாக்கும்.
ஒரு கிராம் வெள்ளைப்பூண்டு, ஒரு கிராம் மிளகு, ஒரு கைப்பிடி துத்தி இலை இவற்றை மைபோல் அரைத்து அதில் ஒரு அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி வடித்து ஆறிய பின் முகப்பரு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
#9. பிரசவத்தை திரியின் ஆகாரத்துடன் நிறைய வெள்ளைப்பூண்டு சேர்த்து வந்தால் வியாதி எதுவும் வராது. குழந்தைக்கும், தாய்க்கும் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். இரத்தம் சுத்தமடையும். தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
#10. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
தோல் நீக்கிய வெள்ளைப் பூண்டு 100 கிராம் எடுத்து நன்றாக இடித்து சாறு பிழிந்து தினசரி காலையில் உட்கொண்டு வந்தால் பூரணமாகக் குணமாகும்.
#11. இரவில் தூக்கமின்மைச் சீர்செய்கிறது. தூங்குவதற்கு முன்பு மூன்று வெள்ளைப் பூண்டை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
#12. சொத்தைப் பல் வலி போன்றவற்றை குணமாக்கும்.
வெள்ளைப்பூண்டு, வசம்பு, நாயுருவி இலை, நாயுருவி வேர் நான்கையும் சம அளவில் எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும்.
#13. உள்நாக்கு அழற்சிக்கு சிறந்த மருந்தாகும்.
உள்நாக்கு அழற்சி ஏற்படும் போது சுத்தமான தேனில் பூண்டை உரித்து ஊறவைத்து சாப்பிட்டால் உள்நாக்கு அழற்சி குணமாகும்.
#14. இதயக் கோளாறை கட்டுப்படுத்தும். பூண்டு பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
You May Also Like: |
---|
அருகம்புல் பயன்கள் |
தர்பூசணி பழம் பயன்கள் |