இந்த பதிவில் “புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பதிவை காணலாம்.
கவிதைகள் என்பது பொதுவாக அனைவரும் விரும்பும் ஒன்றாகும். நம் தமிழில் கவிதைகளுக்கு என தனி இடம் இருக்கின்றது.
Table of Contents
புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- தோற்றம்
- புதுக்கவிதைகளுக்கான இலக்கணம்
- புதுக்கவிதைகளின் வளர்ச்சிக்காலம்
- புதுக்கவிதைகளின் சிறப்புக்கள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் கவிதைகளை விரும்பாத ஆட்களே இல்லை. இவ்வகையில் கவிதைகளின் ஒரு வடிவமே புதுக்கவிதைகளாகும். மரபுக்கவிதை மௌனமாய் மார்தட்டிக் கொள்ள புதுக்கவிதைகள் புரியும் விதமாய் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
நேசம்⸴ காதல்⸴ கோபம்⸴ மகிழ்ச்சி⸴ அன்பு⸴ பாசம்⸴ துக்கம்⸴ ஏக்கம்⸴ எதிர்பார்ப்பு⸴ காத்திருப்பு என எல்லாவற்றையும் சுவைபட புதுக்கவிதைகள் அலங்கரித்து வருகின்றன.
புரியும் வகையிலும்⸴ தெளிவாகவும் புதுக்கவிதைகள் வரையப்படுகின்றன. மனித மனங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தகைய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தோற்றம்
1910ஆம் ஆண்டில் “வால்ட் விட்மன்” எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய “புல்லின் இதழ்கள்ˮ எனும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் குடியேறிய “எஸ்ரா பவுண்ட்” ஒரு சிறந்த புதுமையான புதுக்கவிதையைத் தந்தார்.
கி.பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறக்கலானது. பாரதியால் எழுதப்பட்ட வசனக் கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சியும் அதனோடு கூடிய தேவையும் புதுக்கவிதைக்கு வித்திட்டது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
தொல்காப்பியர் புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை “விருந்துˮ எனப் பெயரிட்டு சிறப்பித்து வரவேற்றார். இதேபோல் நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேˮ என்றார்.
புதுக்கவிதை மரபுக் கவிதைகள் போலல்ல. இவை இலக்கணச் செங்கோல்⸴ யாப்புச் சிம்மாசனம்⸴ எதுகை பல்லக்கு⸴ தனிமொழி சேனை⸴ பண்டித பவனி இவை எதுவும் இல்லாது தம்மைத் தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதைகள் புதுக்கவிதைகளாகும்.
புதுக்கவிதையின் வளர்ச்சி காலம்
புதுக்கவிதையானது மூன்று காலகட்டங்களில் வளர்ச்சியடைந்தது. மணிக்கொடி காலம்⸴ எழுத்துக் காலம்⸴ வானம்பாடிக் காலம் என்பனவே அவையாகும்.
மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி இதழ் மட்டுமன்றி வேறு பல இதழ்களும் புதுக்கவிதைகளை வெளியிட்டுள்ளன. ஜெயபாரதி⸴ சூறாவளி⸴ மோகினி போன்ற இதழ்களைக் கூறலாம். இந்நூல்கள் மணிக்கொடி முதலில் தோன்றியதால் இதனை மணிக்கொடி காலம் எனப்பட்டது.
எழுத்து காலத்தில் எழுத்து⸴ சரஸ்வதி⸴ இலக்கியவட்டம்⸴ தாமரை⸴ கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வளர்ந்தன. சிட்னி⸴ வல்லிக்கண்ணன்⸴ மயன் ஆகியோர் இக்காலத்திற்குச் சிறப்புச் சேர்த்தவர்களாவர்.
வானம்பாடி காலத்தில் வானம்பாடி⸴ தீபம்⸴ கணையாழி⸴ சதங்கை முதலிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தன. சகங்கை⸴ புவியரசு போன்றவர்களை இக்காலத்து புதுக்கவிஞர்களாக்கியது.
புதுக்கவிதைகளின் சிறப்புக்கள்
புதுக்கவிதைகள் எளிய மொழி நடையிலுள்ளதால் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்குச் சான்றாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன.
புதுக்கவிதை வழிப் பல கவிதை முன்னோடிகள் வளர்ச்சி அடைந்தனர். சுருக்கம் கொண்டதனால் எழுதுவது இலகுவாகும். பேச்சுவழக்குச் சொற்கள்⸴ ஒலிநயம் காணப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வடமொழி⸴ ஆங்கிலம்⸴ பேச்சு வழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கருப்பொருளைக் காட்சியாகக் கொண்டு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியதாய் புதுக்கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.
முடிவுரை
தமிழ் இலக்கிய வரலாற்றிலே புதுக்கவிதைகள் தனக்கென தனியிடம் பிடித்துள்ளன புதுக்கவிதை முன்னோடிகள் பலர் பல கவிதைகளை நமக்கு அளித்துள்ளனர் அவர்கள் வழி நாமும் கவிதைகள் படைப்போம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு சான்று புதுக்கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்.
You May Also Like :