மேல்நாட்டவர் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வகைதான் புதினமாகும். ஒருவருடைய வாழ்வைக் கூறக்கூடியது தான் நாவல் ஆகும்.
புதினங்களை நாவல்கள் என்றும் நவீனம் என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் நாவல்கள் என்றே அழைத்தனர். பிற்காலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து புதினம் என அழைத்தனர்.
பொதுமக்கள் படிக்கும் இலக்கிய வகையாக நாவல் இருக்க வேண்டும். இதுவே ஆரம்ப நாவலின் கருத்தாகும்.
நாவல் என்ற இலக்கியமானது முதன்முதலில் இத்தாலியில் தோன்றியது. இத்தாலி நாட்டில் பரிசோதனை முயற்சியாகவே எழுதினர்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பொக்காஷியோ என்ற எழுத்தாளர் தன்கதையினை எழுதினார். அதன் பெயர் தெக்காமரன் ஆகும். இதுவே புதினத்திற்கான முன்னோடியாக விளங்கியது.
சாமவேல் றிச்சஸ்சன் என்பவர் 1741 ஆம் ஆண்டு பமிலா என்கின்ற புதினத்தை எழுதினார். இதுவே உலகின் முதற் புதினம் என்ற சிறப்பைப் பெறுகின்றது.
புதினத்தின் உள்ளடக்கம் எத்தளத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்வியல் பிரச்சினைகளை ஆராயும் களங்களாக, இன வரைவியல் பதிவுகளாக, தத்துவ தரிசனங்களாக, இலக்கிய மறு உருவங்களாக, வரலாற்றுப் பதிவுகளின் படைப்பாற்றல்களாக அமையலாம்.
Table of Contents
புதினம் என்றால் என்ன
நாவல்லஸ் எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே நாவல் ஆகும். புதினம் என்பது ஒரு முழுமையான வாழ்வுப் போக்கை அனைத்து அறங்களோடும் சொல்ல வந்த வடிவமாகும். மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் நாவல் அல்லது புதினம் எனலாம்.
புதின அமைப்பு
கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது. அவையாவன,
- கதைக்களம்.
- கதைக்கரு.
- கருப்பொருள்.
- கதையும் கதைப் பின்னலும்.
தமிழ்ப் புதினங்களின் தோற்றம்
1876 இல் எழுதி 1879 இல் வெளிவந்த முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரமாகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டதாகும்.
சில வருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடியாகக் கருதப்படுகின்றன. அவை ராஐம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், மாதவையர் எழுதிய பத்மாவதி சரித்திரம் என்பனவாகும்.
பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகிய மூன்று புதினங்களும் சமூக நோக்கு பெண்ணின் சிறப்புக்கள் நகைச்சுவை நடை ஆகிய பொதுப் பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றுள் புதின உத்திகளைக் கொண்டு விளங்குவது கமலாம்பாள் சரித்திரமாகும்.
இவற்றைத் தொடர்ந்து பெண்கல்வி மறுப்பையும், பால்யவிவாகத்தைக் குறித்தும், கைமைக் கொடுமைகள் குறித்தும் புதினங்கள் தோற்றம் பெற்றன. அவை முறையே குரசாமி சர்மாவின் பிரேமகலாவத்யம், நடேச சாஸ்திரியின் தீனதயாளு, திக்கற்ற இரு குழந்தைகள், முத்துமீனாட்சி போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
மேலும் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் தரைசாமி ஐயங்கார் ஆகியோர் மேனாட்டு நாவல்களைத் தழுவித் தமிழில் புதினங்கள் பல எழுதியுள்ளனர்.
சமுதாயப் புதினங்கள்
சமுதாய வாழ்வியல் சூழலையும், சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் சமுதாயப் புதினங்களாகும்.
வெங்கடரமணி அவர்களால் எழுதப்பட்ட புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும், தேசப்பற்றையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன.
கல்கி ரா.கிருஸ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட தியாக பூமி, கள்வனின் காதலி, மகுடபதி, அலை ஓசை முதலான புதினங்கள் சாதிக்கொடுமை, விதவைக்கொடுமை, விடுதலை வேட்கை ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளன.
Read more: சிறுகதை என்றால் என்ன