உலகளாவிய ரீதியில் பலர் ஏதோ ஒரு வகையில் தீய பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதில் புகையிலை பயன்பாடும் ஒன்றாக காணப்படுகின்றது.
புகையிலை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படும் எனத் தெரிந்தும் பலர் இன்று வரை அதனை பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரியது.
புகையிலையில் உள்ள நிக்கோடின் அதிக நச்சுத் தன்மை, அதிக தீங்கை விளைவிக்கக்கூடியது. புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
#1. இதயம் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பு.
புகையிலை பயன்படுத்துவது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் கட்டிகளை உருவாக்குகின்றன.
மேலும் சுவாசத்தில் தடை ஏற்பட்டு நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றது. இதனால் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
#2. நோய் எதிர்ப்பு அமைப்பைச் சீர்குலைக்கும்.
புகைப்பிடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் எதிர்ப்பு அமைப்பு சீர்குலைக்கப்படுகின்றது.
#3. புற்றுநோய் ஏற்படும்.
புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயால் இறப்பவர்கள் 30 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். நுரையீரல் புற்றுநோய் 87 சதவீதம் புகைப்பிடிப்பதால் வருகிறது.
நுரையீரல் மட்டும் இல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்று நோயும் புகைப்பிடிப்பதால் தான் அதிகம் ஏற்படுகின்றது.
#4. மரணம் ஏற்படும்.
உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளால் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
#5. எலும்புகளின் அடர்த்தி குறையும்.
அதிக அளவில் புகையிலை பயன்படுத்துவோருக்கு எலும்பு அடர்த்தி குறைகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எலும்புத் தேய்மானப் பிரச்சினை அதிகரிப்பதுடன் மூட்டுகளில் வெளிகளையும் அதிகரிக்கும்.
#6. சுவாச பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
தொடர்ந்த புகைப்பிடிப்பதால் நுரையீரல் சேதப்படுத்தப்பட்டு நுரையீரல் நோய் ஏற்படுகின்றது. நாட்பட்ட மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற பிரச்சனைகளையும் புகையிலைப் பயன்பாடு ஏற்படுத்தும்.
#7. தேவையற்ற முடிகள் வளர்வதற்கு வாய்ப்புண்டு.
புகையிலைப் பொருளான பீடியில் மூன்று மடங்கு அதிக நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது புகைப் பிடிக்கும் பெண்களின் முகத்தில் தேவையற்ற முடி வளர்வதற்கு வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
#8. எரித்ரோபிளாக்கியா ஏற்படுத்தும்.
லுகோபிளாக்கியா என்பது வாய் பகுதியில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத் திட்டுக்களை உருவாக்கும் ஒரு நோயாகும். புகைப்பிடிப்பது மூலம் இந்நோய் ஏற்படுகின்றது.
#9. அருகில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புகை பிடிக்கும் பழக்கத்தால் புகை பிடிப்பவர்கள் மட்டுமன்றி அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஏறத்தாழ ஆண்டு ஒன்றிற்கு 9 லட்சம் பேர் புகைப்பவரின் அருகில் இருப்பதால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக, புகைத்தலால் சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல் நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது.
#10. குழந்தை கருத்தரிப்பு குறையும்.
புகைப் பிடிக்கும் பெண்களுக்கு தானாகவே நிகழும் கருச்சிதைவுகள், எடை குறைந்த குழந்தைகள் மற்றும், குழந்தை பிறக்கும் போது இறத்தல் போன்றவை ஏற்படுகின்றன.
You May Also Like : |
---|
போதைப்பொருள் பாவனையின் விளைவுகள் |
மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் |