இந்த பதிவில் “பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை” பதிவை காணலாம்.
மிகவும் ஆபத்தாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் பாவனையை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
Table of Contents
பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிளாஸ்டிக் உருவான வரலாறு
- பிளாஸ்டிக்கின் விளைவு
- மறுசுழற்சி நுட்பங்கள்
- மாற்றுபொருட்கள்
- பிளாஸ்டிக்கின் வகைகள்
- முடிவுரை
முன்னுரை
பிளாஸ்டிக் எனப்படுவது இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திடநிலையை அடையக்கூடிய ஒரு பதார்த்தம் ஆகும். “பிளாஸ்டிக்கோஸ்” என்ற கிரேக்க சொல்லில் இருந்து இது உருவானதாக சொல்லப்படுகிறது.
உலகமெங்கும் அதிகளவில் பொருட்களை உருவாக்க பயன்படும் பொருளாக இது காணப்படுகிறது. அழுத்தம் கொடுத்தால் வளைந்து கொடுப்பதும் உடைந்து போகாததுமான பதார்த்தமாக இது காணப்படுகிறது.
இவற்றின் நெகிழ்வு தன்மையாலும் விலை குறைவு என்பதனாலும் அதிகளவில் மக்களால் பாவிக்கப்படுகின்றது.
இக்கட்டுரையில் பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி தொடர்பாக நோக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் உருவான வரலாறு
இந்த பிளாஸ்டிக் முதன் முதலாக 1862 இல் லண்டனை சேர்ந்த “அலெக்ஸாண்டர் பார்க்ஸ்” என்பவரால் “செலுலோஸ்” என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டனில் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் “பார்க்ஸ்டைன்” என்று பெயரிட்டார்.
முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடு கொண்டு “செராடின்” என்ற ஒருவகை நெகிழியும் நைத்திரிக் அமிலம், கற்பூரம், மரப்பட்டை, பசை ஆகியவற்றை கொண்டு “செலுலாயிட்டு” என்ற நெகிழியும் உருவானது.
முதலாம் உலகப்போரில் “டுவான்ட்” என்ற அமெரிக்க நிறுவனம் வெடிபொருள் நெகிழி தொழிற்சாலையை துவங்கி அது வளர்ந்தது அதன் பின்பு பிளாஸ்டிக் உற்பத்திகள் உலகமெங்கும் பிரபல்யமாகின.
பிளாஸ்டிக்கின் விளைவு
நாம் பயன்படுத்துகின்ற மூன்றில் ஒரு பங்கு நெகிழிகளான பொதி செய்யும் பொருட்கள், தளபாடங்கள், பாவனை பொருட்கள், இலத்திரனியல் சாதனங்கள், வாகன உதிரிபாகங்கள் போன்ற பல பொருட்கள் பிளாஸ்டிக் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன.
இவற்றினால் உண்டாகும் கழிவுகள் வீதிகள், நீர்நிலைகள், சுற்றுசூழல் முதலியவற்றில் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொருவருடமும் 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கொட்டப்படுகிறது. இவை கடல் உயிர்பல்வகைமையை வெகுவாக பாதிக்கின்றது.
2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்ரிக் அதிகமாகி விடும் என எச்சரிக்கப்படுகிறது. பிளாஸ்ரிக் பொருட்கள் உக்கல் அடையாமையினால் நிலத்தையும் நீரையும் பாதிக்கின்றது.
மறுசுழற்சி நுட்பங்கள்
நாம் ஒரு தடவை பாவித்து விட்டு வீசி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலமாக சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க முடியும். இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தல் ஒரு பாரிய வர்த்தக நடவடிக்கையாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. குப்பையாக வீசப்படும் பிளாஸ்டிக்கை சேகரித்து அதனை மீளவும் புதிய பொருட்களை உருவாக்க நவீன இயந்திரங்கள் காணப்படுகின்றன.
8.5 சதவீதமான பிளாஸ்டிக்கை அமெரிக்கா மீள்சுழற்சி செய்து பாவிக்கின்றது. இவ்வகையான நுட்பங்களை பாவிப்பதனால் பிளாஸ்டிக்கை கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்.
மாற்று பொருட்கள்
ஒரு தடவை பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை என சுற்றுசூழல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சணல் இலை போன்றவற்றினால் உருவாக்கப்படும் பொருட்களை பாவிப்பது சிறந்தது.
பிளாஸ்டிக் தளபாடங்களுக்கு பதிலாக மரத்தினால் உருவானவற்றை பாவிக்கலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக மண் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தாது மாற்றீட்டு பொருட்களை பாவிப்பது மிகவும் நன்றாகும்.
பிளாஸ்டிக்கின் வகைகள்
வெப்பத்தினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இழகும் பிளாஸ்டிக் இறுகும் பிளாஸ்டிக் என்பன காணப்படுகின்றன. வெப்பத்தினால் இறுகி இழக கூடிய பிளாஸ்டிக் வகைகள் மீள்சுழற்சி செய்யக்கூடியனவாகும்.
(Polystyrne, Polypropylene, Ldpe, Pvc) என பலவகையான பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படாமையினால் தான் அதிகளவாக பிளாஸ்டிக் பொருட்கள் சூழலில் விடப்படுகின்றன.
முடிவுரை
எமது அன்றாட பாவனைகளில் பிளாஸ்டிக் பொருட்களுடைய பாவனை தவிர்க்க முடியாதளவிற்கு அதிகரித்து விட்டது.
இவற்றை பாவிப்பதும் அவற்றை சரியாக முகாமை செய்யாமலும் அவை சூழலில் விடுபடுவதனால் ஏராளமான சூழல் சார் பிரச்சனைகள் மாசடைவுகள் ஏற்படுகின்றன.
இவை மனித சமுதாயத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுமோ என்ற அச்சம் இன்று தோன்றியுள்ளது. ஆகவே இந்த ஆபத்தான பிளாஸ்டிக் பாவனையை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
You May Also Like :