பாலின சமத்துவம் என்றால் என்ன

palina samathuvam

பாலின சமத்துவம் என்றால் என்ன

சமூகம் என்பது ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் வாழக்கூடிய அமைப்பாக உள்ளது.

ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை சமுதாயம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதனை பாலினம் என்கின்றோம்.

இந்த பூமியில் பிறக்கக்கூடிய ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதனை தீர்மானம் செய்வது உடலில் உள்ள இனப்பெருக்க செல்களில் உள்ள குரோசோம்கள் ஆகும்.

உடலில் இனப்பெருக்க செல்களில் மொத்தம் 23 ஜோடி குரோசோம்கள் உள்ளன. அதில் 23வது குரோசோம்தான் பிறக்கக்கூடிய குழந்தை பெண்ணா அல்லது ஆணா என்பதை தீர்மானிக்கின்றது.

இவ்வாறு பிறக்கக்கூடிய குழந்தைகள் சமூகத்தில் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்ற கேள்வி எழும்போது பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.

பாலின சமத்துவம் என்றால் என்ன

சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் சமமான உரிமைகளை வழங்குவது பாலின சமத்துவமாகும். எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகளை வழங்குவது எல்லா இடங்களிலும் சமமாக மதித்து நடத்தப்படுவது பாலின சமத்துவம் எனப்படுகின்றது.

மேலும் பாலின சமத்துவம் பற்றி யுனிசெப் “பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆகியோர் சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல் நடத்தப்பட வேண்டும்” எனவும் கூறுகின்றது.

பாலின சமத்துவமின்மை

இன்றளவும் அதிகமான இடங்களில் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்யக்கூடிய ஆண்களுக்கு அதிக ஊதியமும், பெண்களுக்கு குறைவான ஊதியமும் வழங்கக்கூடிய நிலைதான் உள்ளது. இது களையப்பட வேண்டும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சமனான வேலைக்கு சமனான ஊதியம் வழங்கப்படுவது அவசியமானதாகும்.

பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசு பல திட்டங்களையும், நல உதவிகளையும் வழங்குகின்றது. ஆனாலும் பெண்களுக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.

இன்றைய பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அதிகமான வன்முறைகள் சொந்தக் குடும்ப அங்கத்தவர்களாலேயே இடம் பெறுகின்றன.

பாலின சமத்துவமின்மைக்கான காரணிகள்

கல்வி அறிவின்மை – பாலின சமத்துவமின்மைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள காரணிகளில் ஒன்றாக கல்வி அறிவின்மை காணப்படுகின்றது.

இந்தியாவின் 200 1 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வியாளர் அறிவானது 65.38 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு நிலை 75.85 சதவீதமாகவும் பெண்களின் கல்வி அறிவு நிலை 54.16 சதவீதமாகவும் உள்ளது.

குழந்தை திருமணம் – குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் இள வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஆபத்தானது. மற்றும் அவர்கள் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

சமூகத் தீமைகள் – வரதட்சணை முறை, சதி, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றனவும் பெண்களின் குறைந்த நிலைக்கு காரணமாகின்றன.

பாலின சமத்துவமின்மை ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

பெண்கள் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிக்கப்படாததாலும், அவர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாலும் நாட்டின் பொருளாதாரச் சரிவு ஏற்படுவதில் தாக்கம் செலுத்துகின்றது.

பாலின சமத்துவமின்மை சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு, எனவே நாடு முன்னேற அதை நம் சமூகத்திலிருந்து அகற்ற முயற்சிக்க வேண்டும்.

Read more: இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு கட்டுரை

பெண்ணியம் என்றால் என்ன