பழமானது அனைவராலும் விரும்பக்கூடிய ஒன்றாகும். பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழுத்து உண்ணக்கூடிய தன்மையை பெறும் போது பழமாக மாறுகின்றது.
பழமானது மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை தனிப்பழம், திரள்பழம், கூட்டு பழம் என்பனவாகும்.
தனிப்பூவிலிருந்து உருவாகும் பழங்கள் தனிப்பழங்களாகும். இது இரண்டு வகைப்படும். தனி சதைப்பழம், தனி உலர்பழம். தனி சதைப்பழத்திற்கு உதாரணம் கொய்யா, ஆப்பிள், தோடை. தனி உலர்பழத்திற்கு உதாரணம் நெல், கோதுமை, சோளம்.
ஒரு தனிப்பூவிலிருந்து ஒன்றை விட அதிகமான பழங்கள் ஒன்று திரண்டு உருவாகும் பழங்கள் திரள்பழம் எனப்படும். உதாரணம் அன்னமுன்னா, சீதாப்பழம், ஸ்ரோபெரி.
பல பூக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பழமாக உருவாகுதல் கூட்டு பழம் எனப்படும். உதாரணம் அன்னாசி, பலா, ஈரப்பலா.
பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்தும் குறைந்தளவில் கொழுப்புச்சத்தும் காணப்படுகின்றது.
இதனால் உடல் பருமன், இதயநோய், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீரும். வெயில் காலங்களில் வெப்பத்தை தணிக்க தர்ப்பூசணி போன்ற பலவகை பழங்கள் காணப்படுகின்றன.
பழம் வேறு சொல்
- கனி
Read More: நூல் வேறு பெயர்கள்