பருப்பொருள் என்றால் என்ன

parupporul in tamil

அறிமுகம்

பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளும் பருப்பொருளால் ஆனது. பருப்பொருள் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றும் ஒரு பருப்பொருளே ஆகும்.

பருப்பொருளால் ஆனவற்றைப் பொருட்கள் என்கின்றோம். உதாரணமாக அழிப்பான் இறப்பலிருந்து பெறப்படுகின்றது. மேசை மரத்திலிருந்து பெறப்படுகின்றது.

பொதுவாகப் பருப்பொருட்கள் மூன்று நிலைகளில் காணப்படுகின்றது. அவையாவன திண்மம், திரவம், வாயு என்பனவாகும். இவை தவிர பிளாஸ்மா (Plasma), போஸ் ஐன்ஸ்டீன் கண்டேன் சேட் (Bose – Einstin Condensate) என்ற நிலைகளிலும் இருக்கலாம்.

பொருள் அல்லது பொருட்கள் என்பவற்றிற்குப் பதிலாகப் பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு.

எந்தவொரு பருப்பொருட்களும் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணிய துகள்களால் உருவானவை. அதாவது கண்ணுக்குப் புலப்படாத பல நுண்ணிய துகள்கள் சேர்ந்து ஒரு பருப்பொள் உருவாகின்றது.

பருப்பொருள் என்றால் என்ன

பருப்பொருள் என்பது எடை உள்ளதும் இடத்தை அடைத்துக் கொள்வதுமாகும். மேலும் பருப்பொருள் என்பது பொருண்மை கொண்டது. அண்ட வெளியில் உள்ள நிறை மற்றும் பருமனைக் கொண்ட அனைத்தும் பருப்பொருள் எனப்படும்.

திண்மங்கள்

ஒரு பருப்பொருளில் உள்ள நுண் துகள்கள் அவற்றுக்கிடையேயுள்ள ஈரப்பு விசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும். திடப் பொருட்களின் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் அவற்றிலுள்ள நுண் துகள்கள் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.

திடப்பொருள் குறிப்பிட்ட வடிவம் மற்றும் உருவத்தைப் பெற்று இருக்கும். இவற்றிற்கு உதாரணமாக நாற்காலி, கற்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். திண்ம பருப்பொருள்களுக்கு உதாரணமாக கார், பாத்திரங்கள், தளபாடங்கள் போன்றவையைக் கூறலாம்.

திரவப் பொருட்கள்

திரவங்களில் (நீர்மங்களில்) உள்ள நுண் துகள்களுக்கிடையிலான ஈரப்பதன் விசைகள் மற்றும் பிணைப்பு திடப்பொருட்களில் உள்ளதைவிடக் குறைவாக இருக்கும். இதனால் திரவங்களில் மூலக் கூறுகளானவை தளர்வாக இடைவெளிவிட்டு பிணைக்கப்பட்டிருக்கும்.

இவை குறிப்பிட்டளவு கனவளவைப் பெற்றிருக்கும். நீர்மங்கள் பாயும் தன்மையைப் பெற்றுள்ளன. திரவப் பொருட்களுக்கு உதாரணமாக ஆறு, தண்ணீர், பால் போன்றவற்றைக் கூறலாம்.

வாயுக்கள்

வாயுக்களில் உள்ள நுண் துகள்கள் நீர்மங்களில் உள்ள துகள்களை விட மிகக் குறைவாகப் பிணைக்கப்பட்டு இருக்கும். அதனால் வாயுத்துகள்கள் அதி வேகமாக அங்கும் இங்கும் பல்வேறு திசைகளில் அலைந்து கொண்டிருக்கும். இதனை எளிதில் அழுத்தலாம். வாயுக்களுக்கு உதாரணமாக காற்று, Gas pump போன்றவற்றைக் கூறலாம்.

பருப்பொருட்களின் பண்புகள்

பருப்பொருட்களுக்கு திண்மம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகள் மட்டுமன்றி பிளாஸ்மா, போஸ் ஐன்ஸ்டீன் வாயுப்பண்பு போன்ற நிலைகளும் உள்ளன. கூடுதல் நிலைகளான குவார்க் குளுவான் பிளாஸ்மா போன்ற நிலையும் உள்ளதாகக் கருதப்படுகின்றது.

கண்டத்திலுள்ள அணுக்களாலான பருப்பொருட்களின் பெரும் பகுதியானது வெப்ப பிளாஸ்மாவாக அல்லது அரிதான விண்மீன் திரள் மற்றும் அடர்த்தியான விண்மீன்களைக் கொண்டிருக்கும்.

பொருட்களின் மீட்சிப் பண்பு, மீட்சிப் பண்பு என்பது ஒரு பொருளானது உருக்குலைக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப் பெற்றால் அது மீள்ச்சிப் பண்பு (Elasticity) எனப்படும்.

ஒரு திண்மப் பொருளில் அணுக்களுக்கிடையிலுள்ள விசைகளானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களை ஒன்றாகப் பிணைத்துள்ளது. மீள்ச்சிப் பொருட்களுக்கு உதாரணம் – இறப்பர், கயிறு.

மீள்ச்சியற்ற பண்பு பருப்பொருட்களின் மற்றுமொரு பண்பாகும். உதாரணம் – கண்ணாடி, தகைவு மற்றும் திரிபு (Stress and strain) போன்ற பல பண்புளைப் பருப்பொருட்கள் கொண்டுள்ளன.

You May Also Like :
விஞ்ஞானம் என்றால் என்ன
அறிவியல் வளர்ச்சி கட்டுரை