பஞ்சலோகம் என்றால் என்ன

panchalogam in tamil

பஞ்சபூதங்கள் எவ்வாறு ஒரு தனி மனிதனுடைய வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றதோ அதே போன்றே பஞ்சலோகங்களும் ஒரு மனிதனுடைய வாழ்வில் பல நன்மையான விடயங்களை ஏற்படுத்தி தருகின்றது. இது ஐ வகை உலோகங்களை சுட்டக் கூடியதாகும்.

பஞ்சலோகம் என்றால் என்ன

பஞ்சலோகம் என்பது யாதென்றால் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து வகை உலோகங்களின் கலவையினேயே பஞ்சலோகம் ஆகும்.

பஞ்சலோகங்கள் தங்கம் குருவின் சக்தியினையும், வெள்ளி சுக்ரனின் சக்தியினையும், செம்பு சூரிய சக்தியையும், இரும்பு சனியுடைய சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் பெற்றுக் காணப்படுகின்றது.

பஞ்சலோகத்தின் பயன்கள்

ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனி ஆற்றலினை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது சிறப்பிற்குரியதாகும்.

அந்த வகையில் எதிர்மறை ஆற்றலை தவிர்த்து நேர்மறை சக்திகளை வெளிவிடக் கூடிய சக்தி உலோகங்களிடம் காணப்படுவது சிறப்பானதாகும். இதனால் வீட்டில் பஞ்சலோகங்களை பயன்படுத்தும் போது எதிர்மறை சக்திகள் நீக்கம் பெறும்.

உடலில் உள்ள ஆத்ம மற்றும் மனோ சக்தி போன்றவற்றை பெற்றுக் கொள்ள பஞ்சலோகங்கள் துணை புரிகின்றது.

அதாவது பஞ்சலோகங்களில் அணிகலன்கள் செய்து அணியும் போது இவை உடல் இயக்கங்களை சரிவர இயங்கச் செய்து உடலிற்கு பல சக்திகளை ஈர்த்து தரக்கூடியதாக காணப்படுகின்றது.

இன்று கோவில்களில் காணப்படும் பல சிலைகளில் பஞ்சலோகங்கள் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். ஏனெனில் பஞ்சலோக சுவாமிகளை நாம் பார்ப்பதினூடாகவே எமது கண்களின் வழியால் அதன் ஒளி ஊடுருவி உடலுக்கு பிராண சக்தியினை ஏற்படுத்தக் கூடியதாக பஞ்சலோகங்கள் காணப்படுகின்றது.

மேலும் பஞ்சலோகங்களானவை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் காணப்படுவதோடு இரத்தத்தை சுத்தப்படுத்தல், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் இரத்த கொதிப்பு, கை வலி, உடல் உஷ்ணம், நரம்பு வியாதிகள் போன்ற பல்வேறு உடல் சார்ந்த நோய்களை குணப்படுத்தக் கூடியதாக பஞ்சலோகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உடல் ஆரோக்கியத்தினை ஏற்படுத்த பஞ்சலோகங்கள் துணைபுரிகின்றமை சிறப்பிற்குரியதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னோர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

பஞ்சலோகத்தின் மூலம் ஐந்து கிரக சக்திகள் எம்மில் வெளிப்படுவதனை காணலாம். அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு போன்றவற்றில் பல்வேறு கிரக சக்திகள் காணப்படுவதனை காணலாம்.

பஞ்சலோக சிலைகள்

ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை பல சிலைகளை பஞ்சலோகங்களை பயன்படுத்தி தாயரிக்கின்றனர். இதன் மூலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் இரும்பு போன்ற வகையான உலேகங்களை கொண்டு காணப்படுகின்ற சிலைகளை இன்று காணக்கூடியதாக உள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

இவ்வாறன சிலைகள் இன்று பல்வேறு இடங்களில் காணப்படுகின்றமை பஞ்சலோக சிலைகளின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்திகின்றது.

ஆரம்பகாலங்களில் அதாவது சோழர்களின் ஆட்சி காலப்பகுதிகளில் இச்சிலைகளின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டதோடு அக்காலப்பகுதியில் இச்சிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்பட்டது என்பதோடு தெய்வீக ரீதியாகவும் இச்சிலைகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More: வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள்

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்