ஓய்வு வேறு சொல்

ஓய்வு வேறு பெயர்கள்

ஓய்வு வேறு சொல்

ஒருவன் தொடர்ச்சியாக வேலை செய்து அந்த வேளையில் இருந்து சிறிது நேரம் அல்லது சில காலம் விடுபடுவது ஓய்வு எனலாம்.

வேலை செய்யும் அனைவரும் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஓய்வில்லாமல் ஒருவன் வேலை செய்வானாயின் அவன் நோய்வாய்ப்படவும் வாய்ப்புண்டு.

எனவே ஓய்வுக்கு பின் செய்யும் செயல்கள் அதிக பலன் தருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஒருவன் பல வழிகளில் ஓய்வெடுக்கலாம்.

ஓய்வு எடுக்கும் நேரங்களில் பாடல் கேட்கலாம், சுற்றுலா செல்லலாம், படங்கள் பார்க்கலாம், நிம்மதியாக தூங்கலாம் இவ்வாறான பல செயற்பாடுகளின் மூலம் ஒருவன் ஓய்வெடுக்க முடியும்.

ஓய்வு வேறு சொல்

  1. தளர்வு
  2. களைப்பாறுதல்
  3. இளைப்பாறுதல்
  4. விடுப்பு

இவ்வாறான வேறு பெயர்களை கொண்ட ஓய்வு என்பது பொதுவாக இரண்டு வகையில் காணப்படுகின்றன.

  1. மனதிற்கான ஓய்வு
  2. உடலுக்கான ஓய்வு

மனதிற்கான ஓய்வு

மனதிற்கான ஓய்வு என்பது கட்டாயமாகும் .இது வெளித்தெரிவது இல்லை அதனால் எல்லோரும் மனதிற்கு ஓய்வு தேவை இல்லை என்று எண்ணுகின்றனர். ஆனால் மனதிற்கு ஓய்வு என்பது அவசியம் ஆகும். பாடல் கேட்டல், தியானம் செய்தல் என்பதன் மூலம் மனதிற்கு ஓய்வு கொடுக்கலாம்.

உடலுக்கான ஓய்வு

சிறிது நேரம் செயலற்று இருப்பது, மென்மையான உடற்பயிற்சி, சிறந்த குளியல் போன்றவை உடலுக்கான ஓய்வை அளிக்கிறது. இவ்வகையில் தூக்கம் என்பது மனம் உடல் இரண்டிற்கும் தகுந்த ஓய்வு முறையாகும்.

ஓய்வு பற்றிய் மேற்கோள்கள்

  • ஓய்வு ஓர் அழகான உடை. ஆனால், அது இடைவிடாமல் அணியத் தக்கதன்று.
  • வேலைக்கு மாறுபாடாயிருந்தால்தான் ஓய்வு பயனுள்ளது அதையே நோக்கமாகக் கொண்டால், அது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். – டி ஸ்விங்
  • உழைப்பின் நோக்கம் ஓய்வு. – அரிஸ்டாட்டல்
  • ஓய்வும் உழைப்பும் மாறி மாறி இருந்தால், நீண்ட நாள் அவை நிலைத்திருக்கும். – ஓவிட்
  • சிலர், உணவைத் தேடுகின்றனர். சிலர், செல்வத்தையும் சுகத்தையும் தேடுகின்றனர், சிலர் புகழைத் தேடுகின்றனர் ஆனால், எல்லோரும் ஓய்வை நாடுகின்றனர். -வாங்பிரிட்ஜ்
  • ஓய்வு ஊக்கமுள்ள வேலையிலிருந்து ஓடுவதன்று அதற்குத தயார் செய்துகொள்வதாகும்.- ஜெ. டுவைட்

Read more: பொங்கு சனி என்றால் என்ன

ஜென்ம சனி என்றால் என்ன