இந்த பதிவில் “நெகிழி இல்லா உலகம் கட்டுரை” பதிவை காணலாம்.
வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நெகிழிகளில் இளகும் வகை நெகிழி மற்றும் இறுகும் வகை நெகிழி உண்டு.
Table of Contents
நெகிழி இல்லா உலகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நெகிழி வகை
- மனிதனைப் பாதிக்கும் நெகிழி
- நெகிழிப் பயன்பாடு
- மாற்று வழிகள்
- முடிவுரை
முன்னுரை
உலகம் உருவான காலம் முதல் தற்போது வரை மண்ணில் உருவாகிய அனைத்தும் மண்ணிலேயே அழிந்து போக வேண்டும். அதுவே உலக நியதி. அதற்கு மாறாக ஒரு பொருள் உருவாகுமேயானால் அது இந்தப் பூமியின் அழிவிற்கு முதன்மை காரணமாக அமையும். அத்தகைய பொருளே நெகிழி ஆகும்.
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பொருட்களின் பயன்பாடும் தேவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இன்று நெகிழியின் பயன்பாடு அதிகரித்து செல்வது மட்டுமில்லாமல் மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.
எனினும் நெகிழி இல்லா உலகத்தை உருவாக்குவதன் மூலமே மனித குலத்தினை நெகிழிப் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இக்கட்டுரையில் நெகிழி இல்லா உலகம் பற்றி நோக்கலாம்.
நெகிழி வகை
வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நெகிழிகளில் இளகும் வகை நெகிழி மற்றும் இறுகும் வகை நெகிழி உண்டு.
வெப்பத்தால் இளகி குளிர்வித்தால் இறுகிப் பின் இளகி – இறுகி என மாற்றம் செய்யக் கூடிய நெகிழி இளகும் வகையாகும். இவை மறுசுழற்சி செய்யக் கூடியவை.
இளகிப் பின் மீண்டும் இறுகிய பின் மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத மீளாத நெகிழி இறுகும் நெகிழியாகும்.
மனிதனைப் பாதிக்கும் நெகிழி
நெகிழிப் பொருட்களை மக்கச் செய்ய இயலாது. நெகிழிப் பொருட்களில் 33% ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் நெகிழிப் பொருட்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஏதும் அறியாமல் அதே நிலையிலேயே இருக்கும்.
இந்த நெகிழியில் இருந்து வெளிவரும் இரசாயனங்கள் கிட்டத்தட்ட நம் அனைவரின் இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்பாடாக புற்றுநோய், பிறப்புக் குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன.
நெகிழிப் பயன்பாடு
காலை பல் துவக்கத்தில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள யாவும் நெகிழிப் பொருட்களாகத்தான் உள்ளன.
நெகிழி பயன்பாட்டில் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இறப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாறாக இன்று நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பொலித்தீன் தயாரிக்கப்படுகின்றன. பொருட்களை எடுத்துச் செல்லவும் பாதுகாக்கவும் மேலும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் நெகிழியை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றோம்.
மாற்று வழிகள்
ஒரு முறை பயன்படுத்திய பின்பு தூக்கி எறியப்படும் பொருட்களை தயாரிப்பது தீமையே தரும் என்பது சுற்றுச்சூழல் வல்லுனர்களின் கருத்தாகும்.
எனவே இலை சனல், காகிதப்பை, கண்ணாடி, குடுவை, துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
தேநீர்க்கடைகளில் குவளைக்குப் பதிலாக பாக்கு மட்டைகளால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தலாம். கேரளாவில் மடக்கக்கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.
முடிவுரை
நெகிழி மாசுவை நீக்க நாம் ஒவ்வொருவரும் நம்மாலானதைச் செய்திட வேண்டும். சுழற்சி வழியில் நெகிழியை வடிவமைக்கவும், உற்பத்தி செய்யவும் நுகரவும் ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆக்கபூர்வமான செயலுக்கு மட்டும் நெகிழியைப் பயன்படுத்துவோம். நெகிழி இல்லா உலகை உருவாக்கி உலகைப் பாதுகாப்போம்.
You May Also Like : |
---|
நெகிழியின் தீமைகள் கட்டுரை |
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கட்டுரை |