நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை

nugarvor vilipunarvu katturai in tamil

இந்த பதிவில் “நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதனுக்கு தேவையான பொருட்கள், சேவைகள் தரமானதாகவும் சரியான விலை உடையதாகவும் கிடைக்க வேண்டும்.

நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நுகர்வோர் பாதுகாப்பு
  3. நுகர்வோர் பாதுகாப்பு சட்ட நடைமுறைகள்
  4. தேசிய நுகர்வோர் தினம்
  5. நுகர்வோர் உரிமைகள் கடமைகள்
  6. குறைதீர் ஆணையம்
  7. முடிவுரை

முன்னுரை

உலகில் பொருட்களை வாங்குபவர்கள் அனைவரும் நுகர்வோர்கள் என்று அழைக்கப்டுவார்கள்.பொருளை வாங்கும் நுகர்வோர் தாம் பெற்று கொள்ளும் சேவைகள் தொடர்பாக விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மனிதனுக்கு தேவையான பொருட்கள், சேவைகள் தரமானதாகவும் சரியான விலை உடையதாகவும் கிடைக்க வேண்டும்.

இவற்றினை கவனத்தில் கொண்டு தமது தேவைகளை எவ்வாறு பூரத்தி செய்து கொள்ள முடியும் என்பதனை இக்கட்டுரை மூலமாக நோக்கலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு

அமெரிக்காவை சேர்ந்த “இரால்ப் நடார்” என்பவர் நுகர்வோரின் நலன்களை காக்க இயக்கம் ஒன்றினை துவங்கினார். அனைவருக்கும் நன்மை பயக்கும் இவ்வியக்கம் உலகின் பல நாடுகளுக்கும் பரவ துவங்கியது.

இந்தியாவில் மட்டும் 587ற்கும் மேற்பட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. உதாரணமாக தொழில் வரி, மின்கட்டணம், வீட்டு வரி போன்றவை முறையற்றனவாக தெரிந்தால் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தங்கள் குறையை போக்கி கொள்ள முடியும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும் அவர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கவும் அவர்கள் அடைந்து கொள்ளும் பொருளாதார இழப்பினை தவிர்க்கவும் 1986 களில் நுகர்வோர் பாதுகாப்புக்கென சட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறைபாடுள்ள பொருட்களை தடை செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே ஒவ்வொரு நுகர்வோரும் இதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அடிப்படை சட்டங்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம் இவ்வகையான முறைகேடுகளை தவிர்க்க முடியும்.

தேசிய நுகர்வோர் தினம்

இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24ம் திகதி நுகர்வோர் உரிமைகள் தினமானது கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இவற்றின் வாயிலாக நாம் விழிப்புணர்வடைந்து கொள்ள முடியும்.

நுகர்வோர் உரிமைகள் கடமைகள்

நுகர்வோர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் பொது விற்பனை சீட்டினை பெற்று கொள்ள வேண்டும். எடையளவுகளில் உரிய முத்திரை உள்ளதா? என கவனிக்க வேண்டும்.

நியாயவிலை கடைகள், கூட்டுறவுக்கடைகள், சிறப்பங்காடிகள் மூலம் பொருட்களை வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களின் எடை, தரம், விலை என்பற்றறை கவனத்தில் கொள்ள வேண்டும் தவறுகள் இருப்பின் புகார் அளிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொள்வனவு செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதிகளவான பணத்தை மக்கள் செலவழிப்பதனால் தைரியமாக தவறுகளை தெரியப்டுத்த வேண்டியது நுகர்வோரின் கடமையாக உள்ளது.

குறைதீர் ஆணையம்

நுகர்வோர் பெறும் சேவைகளில் இருக்கும் குறைபாடுகளை குறைதீர் ஆணைய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமாக சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்க எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலமாக நுகர்வோரின் குறைகளை தீர்த்து கொள்ள முடியும்.

இவற்றின் மூலமாக தரமான சேவையினை மக்கள் பெற்று கொள்ள முடியும் தமது நலவாழ்வினையும் உறுதிப்படுத்தி கொள்ளவும் முடியும்.

முடிவுரை

அண்மைக்காலங்களாக நுகர்வோர்கள் பல விதமான அசம்பாவிதங்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். பொருட்கள் சேவைகளுக்கான தேவையும் விலையும் மிகவேகமாக அதிகரித்து சென்றாலும் அவை தரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

எனவே மக்கள் நுகர்வு தொடர்பாக மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக இருப்பதன் வாயிலாகவே இச்சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பது வெளிப்படையாகும்.

You May Also Like :
அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்
அறிவியல் வளர்ச்சி கட்டுரை