பஞ்ச பூதங்களில் ஒன்றாக நீர் உள்ளது. நீர் இல்லாவிட்டால் இப்பூமியே பாலைவனமாக மாறிவிடும். அது மட்டுமன்றி உலகின் செயற்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குவது நீரே ஆகும்.
மனித வாழ்க்கையைப் போன்று ஏனைய ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாக உள்ளது.
ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லீட்டர் நீரைப் பயன்படுத்துகிறான் என்று ‘ஐக்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது. அதனால்தான் “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
நாம் உலகில் நீரைப் பெற்றுக் கொள்ளும் ஆதாரங்களாகப் பல உள்ளன. ஆறுகள், குளங்கள், ஏரிகள், கடல் எனப் பல உள்ளன.
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும். தற்போது உலகில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் முப்பள்ளத்தாக்கு (Three Gorges Dam) நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்கமானது சீனாவில் அமைந்துள்ளது. இது யாங்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இது சீனாவின் மின்சாரத் தேவையை 10% பூர்த்தி செய்கின்றது. மேலும் நீர்ப்பாசனம், நீர் வழங்கல், நீர்மின் உற்பத்தி, பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு நீர்த்தேக்க நீர் பயன்படுத்தப்படுகின்றது.
நீர்த்தேக்கமானது மூன்று வகைப்படும். அவையாவன,
- பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்
- கரையோர நீர்த்தேக்கம்
- சேவை நீர்த்தேக்கம்
இது தவிர அளவு, வடிகால் வசதி, வடிவம், நில அமைப்பை பொறுத்து நீர்த்தேக்கத்தை பின்வருமாறும் வகைப்படுத்தலாம்.
- மிகப்பெரிய நீர்த் தேக்கம்
- துணை நீர்த்தேக்கம்
- மிதமான அளவு நீர்த்தேக்கம்
- சிறிய நீர்த்தேக்கம்
- மிகச்சிறிய நீர்த்தேக்கம்
Table of Contents
நீர்த்தேக்கம் என்றால் என்ன
நீர்த்தேக்கம் என்பது நிலத்தில் வடியக் கூடிய நீரை பொதுவான ஒரு இடத்தில் தேக்கி வைத்து நீரை அவ்வப்போது வெளியேற்றும் ஓர் புவிநீர் அமைப்பாகும்.
அதாவது மழைகாலத்தில் நிலத்தில் விழும் நீரை மற்றும் ஆற்றுநீரை, திறந்தவெளியில், நிலத்திலேயேத் தேக்கி வைக்கும் இடம் நீர்த்தேக்கம் ஆகும்.
ஆற்றின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கை தேக்கம் எனவும் கூறலாம். மேலும் தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.
நீர்த்தேக்க மேலாண்மைத் திட்டங்கள்
நீர்த்தேக்க மேம்பாடு என்பது வேளாண் உற்பத்தியை மானாவாரி மற்றும் பகுதி மானாவாரி உள்ள நிலங்களிலும் உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தரிசுநில மேம்பாட்டு துறையில் நீர்த்தேக்க மேம்பாடு மேலாண்மை செய்யப்படுகிறது.
நீர்த்தேக்க மேலாண்மை வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த உதவும் நிலைகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
தற்போது இது ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் நில வளத்துறைக்கு கீழ் மாற்றப்பட்டுள்ளது.
Read more: நீர் மேலாண்மை கட்டுரை