நிலாவரை சூரணம் பயன்கள்

nilavarai choornam uses in tamil

நிலாவரை சூரணம் பயன்கள்

சிறிது உயரமே வளர்ந்து, குறுஞ்செடிபோல நிலத்தில் படர்ந்து இருக்கும் செடியே நிலாவரைச் செடியாகும். இதன் பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தாக அழகாகக் காட்சியளிக்கும்.

சிறிய பழங்களையும் உருண்டை வடிவ விதைகளையும் கொண்டது. கசப்பு சுவையும், வெப்ப வீரியமும் கொண்டது. நிலாவரைச்செடிக்கு, ஆவாகை, ஆலதூலம் போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

தமிழகத்தில் பல இடங்களில் மூலிகைச் சாகுபடி செய்யப்படுகிறது. இச்செடி மருந்துத் தயாரிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

நிலாவரை சூரணம் பயன்கள்

எலும்புகள் மற்றும் மூட்டு ஆரோக்கியம்

மூட்டு வலி, கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி போன்றவை குணமாகும். எலும்பு இணைப்புகளில் உள்ள ஜெல்லை வலிமையாக்கும் ஆற்றல் நிலாவரைக்கு உண்டு.

நிலாவரை பொடியை சுண்டைக்காயளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர எலும்பு இணைப்பு ஜெல்களை அதிகரித்து எலும்புதேய்வு, மூட்டுவீக்கம், போன்ற பாதிப்புகளை குணமாக்கிவிடும். அல்லது நிலாவரை பொடியை சிறிதளவு எடுத்து அதை நீரில் சுண்டக்காய்ச்சி அதைத் தேநீர் போல் அருந்தி வந்தால் மூட்டு வலி குணமாகும்.

மலச்சிக்கலைப் போக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்க ஆவார பொடியை பாலில் சேர்த்து சுண்டும் வரை காயவைத்து அதனுடன் பணங்கட்டு சேர்த்து வைத்துக் கொள்ளவும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னர் இதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

விஷக்கடியைப் போக்கும்.

வேப்பமரத்தின் பட்டையை சாறெடுத்து, அதில் நிலாவரை சூரணத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட, விஷவண்டுகள் கடித்த பாதிப்புகள் மற்றும் விஷ பல்லிகள் வாய்பட்ட விஷக் கோளாறுகள் போன்றன நீங்கும். அல்லது எலுமிச்சம்பழச்சாற்றில், நிலாவரை பொடியை சிறிதுசேர்த்து சாப்பிட்டுவர விஷக்கடி பாதிப்புகள் குணமாகிவிடும்.

உடலை உறுதியாக்கும்.

நிலாவரைப் பொடியுடன் பேரீச்சம்பழத்தை பிசைந்து சாப்பிட்டுவர பசியைத் தூண்டி உடலை வலிமையாகும்.

சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

இதற்கு பசும்பால், பனங்கற்கண்டு ஆகியவற்றை இரவில் நிலாவரைப் பொடியுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடல் சருமம் இளமைப் பொலிவாகும்.

இரத்தைச் சுத்திகரிக்கும்.

உடலுக்கு நன்மை செய்யாத உணவுகள், பானங்கள், போன்றவற்றால், உடல் இரத்தம் கெட்டுப்போய் உடல் பாதிப்படைகின்றது. நிலாவரை பொடியை தூய நெய்யில் சேர்த்து காலையில் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகுவதுடன் புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.

உடல் சூடு மற்றும் கண் பார்வை

கண் பார்வைக் குறைபாட்டை நீக்கி கண்களை புத்தொளி பெறச் செய்யும்.

நிலாவரையை அரைத்து அத்துடன் சீரகம் வில்வப்பழ சதை ஆகியவற்றை சேர்த்து, அரை லிட்டர் நல்லெண்ணையில் சுண்டக்காய்ச்சி, தைலம் போல தலையில் தேய்த்து பின்னர் குளித்துவர உடல் சூடு தணியும், கண்கள் குளிர்ந்து பார்வை தெளிவடையும். கண்கள் புத்தொளி பெறும்.

இரத்தசோகை பாதிப்புகள் நீங்கும்.

இதற்கு நிலாவரைப் பொடியை, தும்பை இலைச்சாற்றில் கலந்து சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரத்தை உடலில் அதிகரிக்கச் செய்யும். நிலாவரை பொடியை, திராட்சையுடன் கலந்து சாப்பிட்டுவந்தாலும், இரத்தம் அதிகரிக்கும். பக்கவாத்தைக் குணப்படுத்தும்.

பக்கவாத கோளாறுகள்

நிலாவரை பொடி, வேலிப்பருத்தி பொடி, முடக்கத்தான் பொடி சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்டக்காய்ச்சி, கால் லிட்டர் அளவில் வந்ததும், வடிகட்டி, தினமும் காலையில் தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர, பக்கவாத கோளாறுகள் நீங்கிவிடும்.

உடல் நாற்றத்தைப் போக்கும்

வியர்வை போன்றவற்றால் ஏற்படும் உடல் நாற்றத்தைப் போக்கும். நிலாவரை பொடியை, மாதுளம்பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டுவர, உடல் நாற்றங்கள் விலகிவிடும்.

Read more: மருதாணி இலையின் பயன்கள்