இந்த பதிவில் “நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை” எனும் தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
உயிர்களை காப்பாற்றும் மருத்துவ தொழில் என்பது ஒரு மகத்துவமான தொழில் ஆகும்.
எதிர்காலத்தில் ஒரு வைத்தியராகி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது என் பெரும் கனவு இதை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
Table of Contents
நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை – 1
எல்லோருக்கும் சிறுவயதிலிருந்து பெரிய கனவு இருக்கும். அது போல எனக்கும் ஒரு பெருங்கனவு இருக்கிறது. வைத்தியராகி ஏழை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பல உயிர்களை காப்பாற்ற வேண்டும். இந்த சமுதாயத்தில் நன்மதிப்பை பெற வேண்டும் என்பது எனது கனவாகும்.
நான் பார்த்த நிஜமான கதாநாயகர்கள் வைத்தியர்கள் தான் உயிர்களை இவர்கள் காப்பாற்றுவதனால் பல கொடிய நோய்களுக்கு இவர்கள் மருந்து கொடுப்பதனால் இவர்களை தெய்வத்துக்கு சமனாக எல்லோரும் பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருக்கும்.
என்றாவது ஒரு நாள் நானும் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பது எனது ஆசை. ஒருவருக்கு உதவி செய்தால் நிறைய அன்பு கிடைக்கும் அது போலவே நிறைய மனிதர்களுக்கு உதவி செய்தால் இன்னும் நிறைய அன்பு கிடைக்கும்.
நான் வைத்தியரானால் நிறைய மக்களுக்க இலவசமாக வைத்தியம் செய்வேன். இங்கே பணக்காரர், ஏழை, உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமமாக நான் வைத்தியம் செய்வேன்.
சிறந்த மருத்துவ சேவையினை நான் வழங்கினால் இங்கே மக்கள் அனைவரும் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள். இதனால் எம்முடைய நாடு மகிழ்ச்சியான நாடாக மாறும்.
இன்று நாம் கேள்விப்படுகின்றது போல வறுமையினால் நல்ல மருத்துவம் கிடைக்காமல் நம்முடைய நாட்டில் யாரும் இறந்து போக மாட்டார்கள் வைத்திய சேவைக்காக அதிக பணம் செலவழிக்க தேவையுமில்லை. “சிறந்த மருத்துவம் எமது நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் கிடைக்க என்னால் இயன்றதை செய்வேன்”.
மக்களுக்கு நோய்கள் வந்த பின்னர் வைத்தியசாலைக்கு வருவதனை விடவும் நோய் வராமல் தடுத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதனை தெளிவுபடுத்துவேன்.
இவ்வாறு என்னால் முடிந்த சேவைகளை எனது நாட்டுக்காக செய்து மக்களிடம் சிறந்த வைத்தியர் என்ற பெயரை பெறுவேன்.
பாரபட்சம் மோசடிகள் இல்லாத சிறந்த வைத்தியராக எனது நாட்டு மக்களுக்கு நான் சேவையாற்றுவேன் இதுவே எனது கனவு.
நான் ஒரு வைத்தியர் ஆனால் கட்டுரை – 2
நான் வைத்தியரானால் இன்று வைத்தியசாலைகளில் மக்கள் மற்றும் வைத்தியர்கள் படுகின்ற இடர்பாடுகளை மாற்ற முயல்வேன்.
உலகத்தில் சிறந்த நாடாக சொல்லப்படும் எமது நாட்டின் அடிப்படை மருத்துவ சேவையில் காணப்படும் குறைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
வளர்ச்சியடைந்த மற்றைய நாடுகள் மருத்துவ துறையில் அதிக வளர்ச்சியடைந்து புதிய தொழில்நுட்பங்களை கொண்டு காணப்படுவதனை போலவே எமது நாட்டையும் மாற்ற நானும் முயற்சி செய்வேன்.
மருத்துவ துறையில் இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற முயற்சி செய்வேன். ஏனென்றால் இந்தியாவின் இளம் சமுதாயம் தான் அடுத்த தலைமுறை இந்தியாவை உருவாக்க விருக்கின்றது. என்று இந்தியாவின் கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் எப்போதும் கூறுவார். அவரது வழியை பின்பற்றி நானும் சிறந்த சேவையை எனது நாட்டுக்கு வழங்குவேன்.
உலகத்தில் பல ஏழை நாடுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பல குழந்தைகள், பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுகின்ற மக்களுக்காகவும் நான் சேவை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
எமது நாட்டில் படித்து விட்டு வெளிநாடுகளில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக செல்லும் வைத்தியர்களை போல அல்லாது சொந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நான் சேவை செய்வேன்.
நான் வைத்தியராகி சம்பாதித்து எமது நாட்டில் மருத்துவராக வர வேண்டும் என்று கனவு காணும் பல ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வி துறையில் சாதிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.
கனவுகளோடும் வறுமையோடும் போராடும் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களையும் நாட்டுக்கு சேவையாற்றும் மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பது எனது இலக்காகும்.
You May Also Like :