நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை

Naan Oru Erumbu Aanal Katturai

இந்த பதிவில் “நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரை தொகுப்பை காணலாம்.

எறும்பினை பார்க்கும் போது அவற்றின் சுறுசுறுப்பும் ஒற்றுமையும் என்னை வியக்க வைக்கும். அந்த எறும்புகளின் கூட்டத்தில் ஒருவனாக என் கற்பனையே இந்த கட்டுரைகள்.

நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை – 1

சுறுசுறுப்பு என்ற சொல்லை கேள்விப்படும் போது அனைவருக்கும் எறும்புகள் தான் ஞாபகத்துக்கு வரும் ஏனென்றால் அவை அந்தளவுக்கு உற்சாகமாக இயங்கி கொண்டிருக்கும் அவற்றினை பார்க்கும்போது எனக்கும் அவற்றைபோல் வாழவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழும்.

நான் ஒரு எறும்பானால் மிகவும் மகிழ்ச்சியாக எனது பொழுதை கழிப்பேன். பகல் முழுவதும் மரக்கிளைகளில் மேலும் கீழுமாய் ஊர்ந்து மரங்களின் பசுமையை அனுபவித்து பழங்களையும் தானியங்களையும் என்னுடைய சக நண்பர்களோடு சேர்ந்து உண்பேன்.

மனிதர்களை போல் போட்டியோ பொறாமையோ எனக்கு இருக்காது. ஒவ்வொரு நாளையும் எந்த கவலைகளும் இன்றி பரந்த காடுகள், ஆற்றோரங்கள், புல்வெளிகள் என்று இயற்கையின் மடியில் நான் கழித்திடுவேன்.

எனக்கு எதிர்காலத்தை பற்றிய கவலையோ கடந்தகாலத்தை பற்றிய வருத்தமோ கிடையாது. எனக்கு தேவையான உணவுகளை இயற்கை தருகிறது. தங்குவதற்கு எனது வீட்டினை நாங்களே மண்ணில் ஒற்றுமையாக உழைத்து அழகாக அமைத்து கொள்வோம்.

வெய்யிலிலும் மழையிலும் இருந்து அவை எம்மை பாதுகாக்கும். மனிதர்களை போல வேற்றுமை இல்லாது நாம் ஒற்றுமையாக வாழுவோம். தேவையற்ற மனக்கவலைகளோ அழுத்தமோ எனக்கு இருப்பதில்லை. இந்த வியப்பான இயற்கையை கண்டு ரசித்து மகிழ்வது எனது பொழுதுபோக்காக இருக்கும்.

கோடைகாலத்தில் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதோடு பிற்காலத்துக்கு தேவையான உணவுகளான தானியங்களை சேமித்து வைத்து கொள்வேன். எம்மை பார்த்து தான் மனிதர்களும் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்போதும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவதனால் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்வேன். இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பினதும் ஒற்றுமையினதும் அவசியத்தை நான் உணர்த்துவேன்.

நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை – 2

இந்த உலகத்தில் பிறக்கின்ற பல கோடி உயிர்களில் நானும் ஒருவன் உருவத்தில் சிறியவனாக நான் இருத்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவன் உழைப்பால் சிறந்தவன் என்னை காட்டிலும் பல மடங்கான சுமைகளையும் சுமக்கும் ஆற்றலுடையவன் நான் எந்த சந்தர்ப்பத்திலும் சோர்வடைய மாட்டேன்.

ஒன்றுபட்டு உழைப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று. யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் எனது வாழ்விடத்தை நானே அமைத்து கொள்வேன். எனக்கு கிடைக்கும் உணவை எல்லோருடனும் பகிர்ந்து உண்பேன்.

மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் நான் தினமும் புதிய புதிய விடயங்களை தேடி ஊர்ந்து செல்வேன். அழகான மலைகளையும் பசுமையான சோலைகளையும் நான் என் நண்பர்களுடன் வரிசையாக அணிவகுத்து சென்று கண்டு மகிழ்வேன்.

இந்த பூமி, இந்த காடுகள், இந்த மரங்கள், புல் பூண்டு இவை யாவும் எனது சொந்தம் என்றே கருதுவேன். மொழி இல்லை, இனம் இல்லை, மதமும் இல்லை இருப்பினும் எல்லா உயிர்கள் மீதும் பேரன்பு கொள்வேன்.

வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும் என்னுடைய வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழவேண்டும் என்பதில் எனக்கு பேரார்வம் இருக்கிறது. மண்ணையும் இந்த இயற்கையையும் பாதுகாத்து வளமாக வைத்திருப்பேன் அப்போது தான் அந்த இயற்கை என்னை பாதுகாத்து வைக்கும்.

ஆனால் இந்த மனிதர்கள் இயற்கையையும் எம்மை போன்ற உயிர்களையும் அழிப்பது கண்டு வேதனை அடைகிறேன். இந்த பூமி எம்மை போன்ற எல்லா உயிர்களுக்கும் சொந்தம் என்பதனால் எல்லோரும் சேர்ந்து வாழவேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது.

You May Also Like:

நான் ஒரு வானூர்தி கட்டுரை

நான் ஒரு விஞ்ஞானி ஆனால் கட்டுரை