நாகலாந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் காணப்படுகின்றது. ஆங்கிலமானது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன் முதலில் இங்கிலாந்திலேயே பேசப்பட்டது.
Table of Contents
நாகலாந்து
இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் நாகலாந்து மாநிலமும் ஒன்றாகும். இம்மாநிலத்தின் தலைநகராக கோஹிமா காணப்படுகின்றது. இந்த மாநிலமானது பழங்குடி மக்களை பெரும்பான்மையாக கொண்டு காணப்படுவதோடு ஆட்சி மொழியாக ஆங்கில மொழியை கொண்டிருக்கின்றது.
நாகலாந்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்தின் முக்கியத்துவம்
ஆங்கிலமானது உலகளாவிய மொழியாகும்.
ஆங்கிலமானது அதிகம் பேசப்படும் ஒரு மொழியாக காணப்படுகின்றது. ஆங்கிலமானது 53 நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாக காணப்படுவதோடு உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஒருவரோடு ஒருவர் இலகுவாக தொடர்பு கொள்ள இந்த மொழியானது துணைபுரிகின்றது.
வணிக ரீதியாக தொழிற்படும் ஒரு மொழி.
வணிக ரீதியான விடயங்களில் ஆதிக்கம் செலுத்த கூடியதொரு மொழியாக இவ் ஆங்கில மொழி திகழ்கின்றது. அதாவது ஆங்கிலமானது அறிவியல், விமான போக்குவரத்து, கணிணிகள், இராஜ தந்திரம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் மொழியாகும். உலகளாவிய சந்தையில் அனைத்து பரிமாற்றங்களும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது என்பது இம்மொழியின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகிறது.
ஆங்கிலம் இணைய பாவனைக்கு அவசியமானதொரு மொழியாகும்.
நவீன காலத்தில் சக்தி வாய்ந்த இணையத்தை ஆங்கிலம் தெரியாதவர்கள் பயன்படுத்த முடியாது என்றளவிற்கு சிறப்புமிக்க மொழியாக ஆங்கிலம் காணப்படுகின்றது. இணையத்தில் உள்ள உள்ளடக்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று கற்று கொள்ள கூடியதொரு மொழியாகும்.
உலகில் உள்ள ஆயிரக் கணக்கான மொழிகளில் ஆங்கிலமே அதிகமானோரால் படிக்கப்பட்டு வரும் ஒரு மொழியாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இன்று உலகெங்கிலும் ஆயிரக் கணக்கான பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் போன்றவை ஆங்கிலத்திலேயே திட்டங்களை வழங்குகின்றன.
இன்றைய கால கட்டத்தில் ஆங்கில மொழிக் கல்வியின் வளர்ச்சி
இன்றைய கால கட்டத்தில் ஆங்கில மொழிக் கல்வி முறையானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. ஏனெனில் ஆங்கில மொழியானது சர்வதேச மொழியாக மதிக்கப்படுவதோடும் கல்வி, நிர்வாக விடயங்களில் பாரிய பங்களிப்பினையும் செய்து வருகின்றது.
விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் ஏதோவொரு வகையில் கற்பிக்கப்பட்டும் கையாளப்பட்டும் வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
இன்றைய கால கட்டத்தில் அநேகமாக பயன் தரும் புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே காணப்படுவதனால் அதைப் பற்றிய விடயங்களை தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஆங்கில மொழி கல்வியானது அவசியமாகின்றது.
கண்டுபிடிப்புக்கள் பற்றிய தகவல்கள், விஞ்ஞான தொழிநுட்ப ரீதியான விடயங்கள் போன்றவை ஆங்கிலத்திலேயே காணப்படுகின்றது.
நவீன கல்வியில் ஆங்கில மொழி கல்வியானது முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது எனலாம். மாணவர்களின் தொடர்பாடல் திறனை அதிகரிக்க கூடியதாக ஆங்கில கல்வி முறையானது காணப்படுகின்றது.
இன்று பாடசாலைகளில் ஆங்கில கல்வியானது ஆரம்பிக்கப்பட்டு காணப்பட்டுள்ளமையானது ஆங்கில கல்வியின் அவசியத்தை எமக்கு எடுத்தியம்புகின்றது.
மேலும் பல்கலைக்கழக மட்டத்திலும் பட்டத்தின் பின் படிப்பினை மேற்கொள்ளவும் ஆங்கில கல்வி அவசியமாக காணப்படுகின்றது. ஏனெனில் இன்று பல்வேறுபட்ட உயர் கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியிலேயே கல்வி திட்டங்களை மேற்கொள்கின்றன.
எனவேதான் ஆங்கில மொழி கல்வியானது இன்று வளர்ச்சியடைந்து வரும் ஒரு கல்வியாக காணப்படுகின்றது.
Read More: ஓமவல்லி இலை பயன்கள்