நல்லொழுக்கம் என்றால் என்ன

nal olukkam in tamil

மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு ஆகும். மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க வேண்டும். மனிதனை சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வது நல்லொழுக்கங்களே ஆகும்.

வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான தேவை நல்லொழுக்கம் ஆகும். நல்ல குணங்கள் பிறவியிலேயே உள்ளன என்று சிலர் கூறலாம். இருப்பினும் நல்லொழுக்கப் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இரக்கம், பொறுப்பு, கடமை உணர்வு, சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, நேர்மை, விசுவாசம், நட்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை ஒழுக்கமான வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கான விரும்பத்தக்க நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நாம் தமிழர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும், மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கமாகும். இனம், மொழி, சாதி, மதச்சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும்.

எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும். பயனுள்ள பழக்க வழக்கங்களை தீமை பயக்காத செயல்களை வளர்த்து நல்லொழுக்க சீலர்களாக வாழ கல்வி அறிவு உதவுகின்றது.

நல்லொழுக்கம் என்றால் என்ன

நல்லொழுக்கம், என்பது ஒரு நபரின் தார்மீக மேன்மை ஆகும். மேலும் நல்லொழுக்கம் என்பது தார்மீக ரீதியில் நல்லவர்களாக இருப்பதற்கான தரம் ஆகும். தார்மீக ரீதியில் சிறந்தவர்கள், நல்லவர்கள் என மதிப்பிடப்படுபவர்கள் நல்லொழுக்கங்களால் உருவாக்கப்பட்ட பண்பைக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அவர்கள் நேர்மையானவர்கள், மரியாதைக்குரியவர்கள், தைரியமானவர்கள், மன்னிப்பவர்கள் மற்றும் அன்பானவர்கள் என கூறுமளவிற்கு சிறந்தவர்களாக இருப்பர்.

அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள், தூண்டுதல்கள், அல்லது ஆசைகளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார்கள். ஆனால் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின்படி செயல்படுபவர்களாக இருப்பர்.

நல்லொழுக்கம் என்பது நல்லதைச் செய்வதற்கான ஒரு பழக்கமான மற்றும் உறுதியான மனநிலையாகும். இது ஒரு நபரை நல்ல செயல்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், சிறந்த வாழ்க்கை வாழவும் நல்லொழுக்கம் அனுமதிக்கிறது.

ஒழுக்கத்தின் மேன்மை

ஒழுக்கம் ஒரு நபருக்கு சிறந்த ஆரோக்கியத்தை வழங்குகின்றது. மோசமான நாளைக் கொண்டிருக்கும் ஒருவரிடம் கருணை காட்டுவது அவரை அல்லது அவளைப் புன்னகைக்கச் செய்து நல்லுறவை வளர்க்கும்.

நல்லொழுக்கமானது உறவின் மீதான நம்பகத்தன்மையையும், நெருக்கத்தையும் வளர்க்கிறது. மதிப்புமிக்க, அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகிறது.

நல்லொழுக்கம் என்ற வார்த்தை Vir என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். இது ஆங்கிலத்தில் Virtue என அழைக்கப்படுகின்றது.

முதலில் அறம் என்பது ஆண்மை அல்லது வீரம் என்று பொருள்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது ஒழுக்க மேன்மையின் உணர்வில் நிலைபெற்றது.

மனித நற்பண்புகள் மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. மற்றும் பாவத்தைத் தவிர்க்கின்றன.

நல்லொழுக்கங்கள் நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின் கட்டளைகளின்படி நம் நடத்தையை வழி நடத்துகின்றன. சுயக்கட்டுப்பாட்டின் அடிப்படையிலான சுதந்திரத்தை நோக்கியும், நல்ல ஒழுக்க வாழ்வில் மகிழ்ச்சியை நோக்கியும் நம்மை வழி நடத்துகின்றன.

ஒழுக்கம் பற்றிப் பெரியார் கூறிய சிந்தனைகள்

பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு ஆகும்.

மற்றவர்களிடம் பழகும் விதத்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாகக் கற்றுக் கொண்டால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதனாவான்.

நாடு சுபீட்சத்துடன் வாழ வேண்டும் என்றால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படி எல்லோரிடமும் அவனும் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Read more: தனிமனித ஒழுக்கம் கட்டுரை

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை