உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரம் நீர் ஆகும். உயிருக்கு ஆதாரமான நீரை நாம் பல வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆறுகள், ஏரிகள், செயற்கை நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், நீரூற்றுகள், கிணறுகள், ஆர்ட்டீசியன் கிணறுகள், வளிமண்டலம், பனிப்பாறைகள், கடல் நீர், உப்புநீக்க அமைப்புகள் (மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை மூலங்கள்) போன்றவை முக்கியமான நன்னீர் மூலாதாரங்கள் ஆகும்.
பூமியில் உள்ள மொத்த நீரின் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறைபனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது.
ஆனால், உண்மையில் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் நீரின் அளவு, பூமியில் உள்ள அனைத்து நீரையும் விட மிகக் குறைவு. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் நீர் பயன்படுத்தப்படுகின்றது.
உலகில் உள்ள உயிரினங்களின் தாகத்தை நன்னீரானது பாதிக்கும் மேற்பட்டளவு பூர்த்தி செய்து தாகம் தீர்க்கும் ஊற்றுப் போல் செயற்படுகின்றது என்றால் அது மிகையல்ல.
நில மாசுபாடு, காற்று மாசுபாடு ஆகியவை நன்னீர் வாழிடத்தை அதிகளவு பாதிப்படையச் செயய்கின்றன.
பூமியில் உள்ள நன்னீர் இருப்புகளுக்கு முக்கிய அச்சுறுத்தல் மனித கழிவுகள், தொழில்துறை கழிவுகள் போன்றன காணப்படுகின்றன.
வளர்ந்த நாடுகளில் புதிய நீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கையின் பரிசான நன்னீர் வாழிடத்தைப் பாதுகாத்து நம்முடைய சந்ததியினருக்கு அளிப்பது நம் ஒவ்வொருவரதும் கடமை என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.
Table of Contents
நன்னீர் என்றால் என்ன
நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். அதாவது ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் எனப்படும்.
மேலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல், மனித குடிப்பதற்கும், சமைப்பதற்கும் ஏற்ற “சுத்தமான நீர்” நன்னீர் எனலாம்.
நன்னீர் கடலுடன் கலப்பதால் கிடைக்கும் பயன்கள்
தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல கடலுக்கும், பல்லுயிர்களுக்கும் சொந்தம் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.
ஆற்று நீர் கடலில் கலப்பதால் பல்வேறு மறைமுகப் பயன்கள் கிடைக்கின்றன. இது பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. கடலில் நீர் கலப்பதால் கடற்பரப்பு சமநிலையாக இருக்கும்.
கடல் நீரின் உப்புத் தன்மை குறைந்து, கடல் வாழ் உயிரினங்கள் வாழ வழிவகை செய்யும், கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரைப் பகுதிகளில் வந்து இனப்பெருக்கம் செய்ய உதவும், நன்னீரில் உள்ள கனிமங்கள் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களுக்கு சிறந்த உணவாகும்.
அலையை ஆற்றுப்படுத்தும் காடுகள் (அலையாற்றிக் காடுகள்) உருவாகி சுனாமி போன்ற பேரலைகளைத் தடுக்க உதவும்.
கடலில் நீர் கலப்பதால் அங்கிருந்து வெளிவரும் ஆக்சிஜனின் அளவு அதிகமாகிறது. கடலில் வாழக்கூடிய தாவரங்களுக்கும், நுண்ணுயிரிகளுக்கும் நன்னீர் அத்தியாவசியமான ஒன்றாகும்.
கடலின் நன்னீர் கலக்காமல் இருந்தால் இயற்கையான சுழற்சி தடைப்பட்டு பருவ மழையும், பெய்யும் காலமும், அளவும் மாறி விடும்.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்தியேகமான கடல் வாழ் உயிரினங்கள் உண்டு. அந்த உயிரினங்களை பாதுகாப்பதற்காகவும், கடலில் உப்பின் அளவைச் சமநிலையில் வைத்து இருப்பதற்காகவும் கடலில் கலக்கும் ஆற்று நீர் முக்கிய பங்கு வகிக்கின்றதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: நீர் மேலாண்மை கட்டுரை