Table of Contents
அறிமுகம்
ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும், குணநலங்களும், பண்பாட்டுக் கூறுகளும் இந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என்பர் நிலவியல் அறிஞர்கள்.
ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. (குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல்)
மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வரட்சியான பகுதியையும் தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர்.
மேலும் தமிழர்கள் நிலத்தை வேறு வகைகளாகவும் பிரித்தனர் அவற்றுள் நஞ்சையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மண் வளத்தையும், தரத்தையும் வைத்து நிலத்தை பிரித்தனர்.
அதன்பின் நிலத்திற்கு நீர் பாய்ச்சும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நஞ்சை நிலம், புஞ்சை நிலம் என இரு வகையாகப் பிரித்தனர்.
நஞ்சை நிலம் என்றால் என்ன
நஞ்சை நிலம் என்பது ஏரி, கண்மாய் மற்றும் ஆற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் நிலங்கள் தான் நஞ்சை நிலங்களாகும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப் பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.
பெரும் பகுதி ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எல்லா நிலங்களுமே நஞ்சை நிலங்களாகும். பருவம் தோறும் நன்கு பக்கவப்பட்ட நிலத்தினில் விளைச்சலுக்குப் பயன்படும் நிலம் எனவும் கூறலாம்.
நஞ்சை நிலத்தில் அதிகமாக நெல், வெற்றிலை, கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்வார்கள். இவை தவிர சிறு சிறு விவசாயங்கள் இந்நிலங்களில் மேற்கொள்வர்.
நிலத்தின் வகைகள்
அரச அறிக்கையின்படி நஞ்சை, புஞ்சை, நத்தம், மானாவாரி, புறம்போக்கு, தீர்வை ஏற்பட்ட தரிசு, தீர்வு ஏற்படாத தரிசு எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதில் நீர்ப்பாசன முறையிலிருந்து சாகுபடிக்கு நீர் பெறும் உரிமையைப் பெற்றும். நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்களாக நஞ்சை அமைகின்றது. எடுத்துக்காட்டு வயல்வெளிகள் போன்றவை ஆகும்.
நீர்ப்பாசன வசதி இல்லாத மேடான நிலம் புஞ்சை ஆகும். இந்நிலங்களில் கம்பு, ராகி போன்ற தானியங்களில் விளைவிக்கக்கூடிய விவசாயம் செய்யக்கூடிய நிலங்களாக இருக்கும். இவை மழை மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி இருப்பவையாகும். எடுத்துக்காட்டு மேட்டு நிலம், தோட்டப்பயிர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வீட்டுமனைகள் உள்ள இடம் நத்தம் எனப்படும். நத்தம் ஆனது மூன்று வகைப்படுகிறது. கிராம நத்தம், சேரி நத்தம், புறம்போக்கு நத்தம் என்பனவே அவை மூன்றும் ஆகும். இதில் புறம்போக்கு நத்தம் என்பது அரசாங்கத்தின் அனுமதி வாங்காமல் பட்டா இல்லாமல் குடியிருப்பு பகுதிகளாக இருக்கும் நிலங்களை புறம்போக்கு நத்தம் என்கின்றனர்.
அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடம் புறம்போக்கு நிலமாகும். ஆனால் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் பொது விடயங்களுக்கு பயன்படும் வகையிலும் காணப்படும் நிலம் புறம்போக்கு நிலம் ஆகும். எடுத்துக்காட்டு தரிசுநிலம், மந்தைவெளி, கரடு, மயானம் போன்றவைகளாகும்.
மானாவாரி நிலம் என்பது மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் நிலங்கள் ஆகும். நெல் போன்ற தானியங்களை விளைவிக்கும் நிலங்களாகும்.
தீர்வை ஏற்பட்ட தரிசு என்பது, அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்யத் தகுதி வாய்ந்த நிலங்களை தீர்வு ஏற்பட்ட தரிசு என்றும், சாகுபடி செய்ய இயலாத பாறை போன்று இருக்கும் நிலங்கள் தீர்வு ஏற்படாத தரிசு எனவும் அழைக்கப்படும்.
You May Also Like : |
---|
பீடபூமி என்றால் என்ன |
சூழல் என்றால் என்ன |