தொப்புள் வேறு பெயர்கள்

தொப்புள் வேறு சொல்

தொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி நீக்கப்படும். அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும்.

தூய தமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு. இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள் குழி என்று குறிப்பிடப்படுன்கிறது. உந்தி, நாபி என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது.

ஆங்கிலத்தில் நாவெல் (navel) அல்லது பெல்லி பட்டன் (belly button) என்று குறிப்பிடப்படுகிறது. மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது.

அனைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாகக் காணப்படுவது மனிதர்களில் மட்டுமே.

இவ்வாறான தொப்புளானது ஆன்மீக ரீதியிலும் ஆயுர்வேத மருத்துவ ரீதியிலும் உலக காலாச்சார ரீதியிலும் முக்கியம் பெறும் மனித உறுப்பாகும் காணப்படுகின்றது.

தொப்புளின் வேறு பெயர்களும் பல காணப்படுகின்றன அவற்றை இங்கு நோக்கலாம்.

தொப்புள் வேறு பெயர்கள்

  1. உந்தி
  2. நாபி
  3. கொப்பூழ்
  4. புவ்வம்
  5. தொப்புள்குளி

தொப்புளின் வகைகள்

மனித உடற்கூற்றியலின்படி ஆங்கிலத்தில் தொப்புளை உட்புறத் தொப்புள் (Innie, இன்னி) மற்றும் வெளிப்புறத் தொப்புள் (outie, ஔட்டி) என்று இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

  • உட்புறத் தொப்புள்

தொப்புள்கொடி நீக்கப்பட்டபின் வயிற்றில் ஒட்டியிருக்கும் கொடியின் மிச்சப்பகுதியானது காய்ந்து விழுந்து விடும். இதன் காரணமாக உருவாகும் வடுவானது துளை போன்ற தோற்றம் கொள்ளும். இவ்வகையான தொப்புளே உட்புறத் தொப்புள் எனப்படுவது ஆகும். இதுவே பொதுவான வகையாகும்.

  • வெளிப்புறத் தொப்புள்

சில சமயம் வயிற்றில் ஒட்டியிருக்கும் கொடியின் மிச்சப்பகுதியை சுற்றி இருக்கும் தசைகள் அழுத்தி அப்பகுதியை வெளியில் பிதுக்க செய்துவிடும். இதன் காரணமாகக் காய்ந்தபின்பும் தொப்புளில் இருந்து சிறிய பகுதி வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். இவ்வகையான தொப்புளே வெளிப்புறத் தொப்புள் எனப்படுவது ஆகும்.

Read more: அருகம்புல் பயன்கள்

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை