மனிதானவன் தொடர்பாடலின் ஊடாகவே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றான். தொடர்பாடலின் ஊடாகவே தாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை சிறந்த முறையில் தெரிவிக்கின்றான். இத்தகைய செயற்பாட்டிற்கு தொடர்பாடல் திறன் மிக முக்கியத்துவமான ஒன்றாகும்.
Table of Contents
தொடர்பாடல் திறன்கள் என்றால் என்ன
தொடர்பாடல் திறன் என்பது ஓர் தொடர்பாடல் செம்மையானதாகவும், ஆரேக்கியமுடையதாகவும் காணப்படுமாயின் அது தொடர்பாடல் திறன் எனப்படும்.
மனிதனுடைய ஆளுமை விருத்திகளில் இன்று தொடர்பாடல் திறனானது பரிசீலிக்கப்படுகின்றது. அதாவது தெளிவாக கூறல், சரளம், சிறந்த அணுகுமுறை போன்றன தொடர்பாடல் திறன்களாகும்.
ஒரு தகவலை தெளிவாகவும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் சொல்வதே தொடர்பாடல் திறனானாகும்.
தொடர்பாடல் திறன்களின் வகைகள்
வாய்மொழி தொடர்பாடல் திறன்
அதாவது ஒரு தகவலை வாய்மொழியாக கூறுவதினூடாக அந்த தகவலை இலகுவாக புரிய வைக்க முடியும் இதுவே வாய்மொழி தொடர்பாடல் திறன் ஆகும். வாய்மொழி என்பது பேசுவதனை குறிக்கின்றது. வாய்மொழி தொடர்பாடல் திறனானது பேசபவரது மொழியைவிட அதனை பெறுபவரின் மொழியில் இருப்பதே சிறந்த தொடர்பாடல் திறனாகும்.
எழுத்துமூல தொடர்பாடல் திறன்
ஒரு மொழியை பயன்படுத்தி எழுதலே எழுத்துமூல தொடர்பாடல் திறனாகும். அதாவது கணணி, தட்டச்சு முறைகள் போன்றவற்றின் மூலமாகவும் எழுத முடியும். அதாவது அறிக்கை, கட்டுரை, துண்டுபிரசுரம் என பல்வேறுபட்ட மாதிரிகளின் ஊடாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
கட்புல தொடர்பாடல் திறன்
கண்களால் பார்ப்பதன் மூலம் ஏற்படும் தொடர்பாடலே கட்புல தொடர்பாடல் திறனாகும். அதாவது சித்திரம், சினிமா, புகைப்படம் போன்றவை இதனுள் அடங்கும். மனித சமூகத்தின் ஆரம்பம் முதல் கட்புல தொடர்பாடல் திறன் மூலமே தொடர்பாடலை மேற்கொண்டனர். கட்புல தொடர்பாடல் திறனையே இன்று அதிகம் விரும்புகின்றனர்.
கேட்டல் தொடர்பாடல் திறன்
அதாவது ஒலிகள், சப்தங்கள், இசைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். அதாவது ஒரு விடயத்தை சிறந்த முறையில் கேட்டலே கேட்டல் தொடர்பாடல் திறனாகும். தொடர்பாடல் திறனானது சிறந்த முறையில் காணப்படும் போது இலகுவாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும்.
குழுக்களுக்கிடையிலான தொடர்பாடல் திறன்
அதாவது குழுக்களுக்கிடையியே சிறந்த முறையில் தொடர்பாடல் இடம்பெறுகின்ற பட்சத்திலேயே தொடர்பாடல் சிறந்ததாக அமையும்.
தொடர்பாடல் திறனில் உள்ள முக்கிய அடிப்படை அம்சங்கள்
அனுப்புனர்
அதாவது தொடர்பாடல் ஒன்று சிறந்ததாக அமைய வேண்டுமெனின் அதனை வழங்குபவர் தெளிவாகவும் பெறுபவர் சிறப்பாக பெற்றுக்கொள்ளும் வகையிலும் தொடர்பாடலானது அமைந்து காணப்படல் வேண்டும்.
பெறுனர்
தொடர்பாடலை மேற்கொள்ளும் போது அதனை பெற்று கொள்பவர் தெளிவான முறையில் அந்த தகவலை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஊடகம்
தொடர்பாடல் திறனில் அவசியாமானதொன்றே தொடர்பாடலை மேற்கொள்ளும் ஊடகமாகும். ஊடகமானது சரியான முறையில் அமையும் போதே தொடர்பாடலானது பிறர் புரிந்து கொள்ளும் வகையில் அமையும்.
தொடர்பாடல் திறனில் தடையை ஏற்படுத்தும் காரணிகள்
மொழி தெரியாமை
அதாவது தொடர்பாடல் ஒன்றினை மேற்கொள்ளும் போது மொழியானது அவசியமானதாகும். மொழி பற்றிய அறிவின்மை காணப்படுமாயின் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் தடை ஏற்படும்.
நேரம் போதாமை
தொடர்பாடலை மேற்கொள்ளும் போது நேரம் போதாமையின் காரணமாக தகவல்களை சரிவர கூற முடியாத நிலமை ஏற்படும்.
உள்ளடக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ளாமை
அதாவது உள்ளடக்கத்தினை தெளிவாக புரிந்து கொள்ளாமையின் காரணமாக தொடர்பாடலினை மேற்கொள்வது சிரமமாக காணப்படும். தெளிவாக ஒரு விடயத்தினை புரிந்து கொள்ளும் போது இவ்வாறாக தொர்பாடலில் தடை ஏற்படாது ஒரு விடயத்தை சிறந்த முறையில் விளங்கி கொள்ள முடியும்.
கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
தொடர்பாடல் இடம் பெறுகையில் கவனத்தை திசை திருப்பும் காரணங்களில் ஈடுபடக் கூடாது. சரியாக அந்த விடயத்திலேயே கவனம் செலுத்தல் வேண்டும்.
Read More: தொடர்பாடல் என்றால் என்ன