பல விடயங்களை ஒன்று சேர்த்து ஒன்றாக சேர்த்த தொகுதியே தொகுப்பு எனப்படும். பொதுவாக தொகுப்பு என்பது ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட விடயங்களின் சேர்க்கையாகக் காணப்படும்.
இதற்கு ஆதாரமாக திருமுறைகள் தொகுப்பு, மலர் தொகுப்பு, புத்தகத் தொகுப்பு என்பவற்றை கொள்ளலாம். பொதுவாக தொகுப்பு என்ற சொல் கலை துறையிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
அதுமட்டுமின்றி நாம் மலர்களை தொகுத்தே மாலை கட்டுகின்றோம். ஒன்று தனியாக இருக்கும் பொழுது தராத சிறப்பானது தொகுதியாக இருக்கும் பொழுது கிடைக்கின்றது. இவ்வாறான தொகுப்பு என்ற சொல்லிற்கு தமிழில் வேறு சொற்கள் உள்ளன.
தொகுப்பு வேறு சொல்
- தொகுதி
- திரட்சி
- கூட்டம்
- சேர்க்கை
- கோவை
- கோர்வை
- கொத்து
இவ்வாறான பெயர்கள் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.
தொகுப்பு என்ற சொல்லுக்கான சில உதாரணங்கள்
சாவிக் கொத்து: இது சாவிகளின் சேர்க்கையை அதாவது தொகுப்பை குறிக்கும்.
திருமுறைத் தொகுப்பு: நாயன்மார் பாடிய பாடல்களின் தொகுப்பை குறிக்கும்.
ஆசாரக் கோவை:- மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களின் தொகுப்பாக இது காணப்படுகின்றது.
இவற்றை எல்லாம் நோக்கின் எல்லாவற்றினதும் சேர்க்கை தொகுப்பாக கொள்ளப்படுவதோடு அவை ஒரே பண்பினை உடையதாக காணப்படுவதையும் இதன் மூலம் அறியலாம்.
Read more: பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது எப்படி