ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தேசியக் கொடி மிகவும் முக்கியமானது, அது நம் இந்திய நாட்டிற்கும் பொருந்தும். சர்வதேச அரங்கில் இந்தியாவின் தனிச் சிறப்புமிக்க அடையாளமாக இந்திய சுதந்திரக் கொடி திகழ்ந்து வருகின்றது.
இந்தியத் தேசிய கொடி நமது சுதந்திரத்தையும், தைரியமான சுதந்திர போராளிகள் போராடிய நீண்ட போராட்டத்தையும் நினைவுபடுத்துகின்றது.
ஒட்டு மொத்த இந்தியாவை ஒன்றிணைக்கும் மஹா சக்தி இந்திய தேசிய கொடிக்கு உண்டு. இந்திய தேசிய கொடியின் சிறப்பம்சங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
தேசிய கொடியின் சிறப்பு
#1. மூவர்ணக் கொடி.
இந்திய தேசிய கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைப்பர். தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகும்.
#2. மதச் சார்பற்றது.
இந்திய தேசியக் கொடி எந்த மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக மதங்களை குறிக்கும் வித்தத்தில் அமையபெற்ற அனைத்தையும் மாற்றி தற்போதுள்ள வடிவத்தை இந்திய தேசியக் கொடி கொண்டுள்ளது.
#3. அசோகச் சக்கரம்.
இந்திய தேசிய கொடியின் மையப் பகுதியில் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரம் உள்ளது. தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
#4. மூவர்ணங்கள் குறிப்பது.
காவி நிறம் தியாகத்தையும், பலத்தையும், தைரியத்தையும் வெள்ளை நிறம் தூய்மை, உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம் நாட்டின் வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
#5. பிங்காலி வெங்கையா.
இந்திய தேசிய கொடியனது, ஆந்திராவை சேர்ந்தச திரு. பிங்கலி வெங்கைய்யா என்கிற விவசாயியால் உருவாக்கப்பட்டதாகும். இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#6. இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இந்திய தேசிய கொடியானது ஜுலை 22, 1947 அன்று, அதாவது சுதந்திர பெறும் தினமான ஆகஸ்ட் 15, 1947 க்கு சில தினங்கள் முன்பு ஏற்றப்பட்டது.
இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, ஆங்கிலேயரின் கொடியை இறக்கி விட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்.
#7. காதி ஆடை
இந்திய தேசியக் கொடியானது இந்திய சட்டத்தின் படி கைராட்டியால் நூற்கப்பட்ட காதர் துணியில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றது.
#8. தேசியக்கொடி ஏற்றப்படும் நேரம்.
தேசியக்கொடிக்காக வரையறுக்கப்பட்ட விதிமுறையின் கீழ், தேசியக்கொடியானது பகல் நேரத்தில் மட்டுமே ஏற்றப்பட வேண்டும்.
#9. இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம்.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி என்ற கிராமத்தில் உள்ள ‘கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ என்ற இடத்தில் அமைத்துள்ள தொழிற்சாலையில் மட்டுமே இந்திய கொடிகள் உற்பத்தியாகிறமை சிறப்பம்சமாகும்.
#10. எவரெஸ்ட் சீக்கிரத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் 1953-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
You May Also Like : |
---|
தேசியக் கொடி பற்றிய கட்டுரை |
தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை |