தேசியக் கொடி பற்றிய கட்டுரை

Thesiya Kodi Katturai In Tamil

இந்த பதிவில் “தேசியக் கொடி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு நாட்டின் பெருமை மிக்க அடையாளமாக தேசியக் கொடி விளங்குகின்றது. இதற்குரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

தேசியக் கொடி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. பிங்காலி வெங்கையா
  4. வடிவம்
  5. கொடியைக் கையாளும் முறை
  6. முடிவுரை

முன்னுரை

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அடையாளங்கள் உண்டு. ஒரு சில நாட்டின் அடையாளம் நாட்டினுடைய விசேட அம்சங்களாக அல்லது, அந்நாட்டு மக்கள் போன்ற ஏதாவதொரு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

ஆனால் எல்லா நாடுகளுக்கும் அடையாளங்கள் என்றால் உண்மையில் அந்நாட்டினைப் பிரதிபலிக்கின்ற சின்னங்களாகும்.

அதில் ஒரு சின்னம் தான் தேசியக்கொடி ஆகும். இந்திய தேசியக்கொடி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வரலாறு

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திர உணர்வையும்⸴ ஒற்றுமையையும் மக்களிடம் ஏற்படுத்த ஒரு கொடி தேவைப்பட்டது. இதன்படி 1904 ஆண்டு நிவேதிதா என்பவரே முதன் முதலில் ஒரு கொடியை உருவாக்கினார்.

சிவப்பு வண்ண சதுர வடிவத்துடன் மஞ்சள் நிறத்தில் உள்வடிவத்திலும்⸴ நடுவில் வெள்ளை நிறத் தாமரையையும் கொண்டிருந்தது. இதில் வங்கமொழியில் “வந்தே மாதரம்ˮ என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது.

முதன் முதலாக மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடி கொல்கத்தாவின் கிரீன் பார்க்கில் 1906 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது. 1907 ஆம் ஆண்டு மேடம் பைக்கஜி காமா என்பவரால் பாரிஸில் ஏற்றப்பட்ட கொடியும் முதல் கொடியைப் போல மூன்று வர்ணங்களைக் கொண்டிருந்தது.

பாலகங்காதர திலகர மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய கொடி ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிறப் படுக்கைக் கோடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இக்கொடி 1917-ஆம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கத்தின் போது ஏற்றினார்கள்.

பிங்காலி வெங்கையா

ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரராவார். இவர் 1876 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திராவின் மசிலிபட்டி என்னும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவராவர்.

இவரால் உருவாக்கப்பட்ட கொடியில் இந்து⸴ முஸ்லிம்களைக் குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும்⸴ பச்சை நிறம் இடம் பெற்றுள்ளது.

இதை பார்த்த காந்தி அதில் வெள்ளை நிறத்தையும் சேர்க்குமாறு கூறினார். 1931 ஆம் ஆண்டு கராச்சியில் கூடிய காங்கிரஸ் குழு கொடியை ஏற்றுக்கொண்டது.

வடிவம்

இந்திய தேசிய கொடியின் நீளம்⸴ அகலம் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இதை கதர் துணியில் தயாரிக்கின்ற முழு உரிமை கர்நாடக காதி மற்றும் கர்நாடகா கிராம்யோக சம்யுக்தா சங்கத்திற்கு உண்டு.

கொடியைக் கையாளும் முறை

இந்திய தேசியக் கொடியானது காதி என்ற கைத்தறியில் மட்டுமே இருக்க வேண்டும். தேசியக் கொடியை கையாளவும் அதற்குரிய மரியாதை செலுத்துவதும் மிக முக்கியமான கடமையாகும்.

தேசியக் கொடியை எந்த விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடியைக் கிழித்தல்⸴ எரித்தல்⸴ அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். நிலத்திலோஅல்லது⸴ தண்ணீரிலோ படும்படி பறக்கவிடுதல் தவறாகும்.

முடிவுரை

நம் நாட்டின் அடையாளச் சின்னமாகவும்⸴ மரியாதைக்கும்⸴ போற்றுதலுக்கும் உரியதுமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது. எனவே அனைவராலும் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும்.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்த தியாகிகளையும்⸴ நம் தேசத்தையும்⸴ தேசிய கொடியையும் காப்போம்.

You May Also Like :

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா

குடியரசு தினம் பற்றிய கட்டுரை