திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்

thirumana porutham in tamil

திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆணும் பெண்ணும் இணைந்து தங்களின் அடுத்த சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த பதிவில் திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்

ஜாதக ரீதியாக திருமணத்திற்கு 12 பொருத்தம் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த 12 பொருத்தங்களும் அனைவருக்கும் அமைவதில்லை. ஆகவே இந்த 12 பொருத்தங்களில் திருமணத்திற்கு மிக முக்கியமாக பார்க்கப்படும் 5 பொருத்தங்கள் இருந்தாலே திருமணம் செய்யலாம்.

திருமண பொருத்தத்தில் திருமண பந்தத்தில் இணைய இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் 12 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களது மனப்பொருத்தம் ஒத்துப்போகிறது என்றாலே போதும்.

ஆகவே திருமணம் செய்யும் இருவருக்கும் அவர்களது ஜாதகத்தில் தின பொருத்தம், கணப்பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜி பொருத்தம் ஆகிய 5 பொருத்தங்கள் இருந்தாலே போதும். அவ்விருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம். இருவரது வாழ்வும் சிறப்பாக அமையும்.

35 வயதை தாண்டிய பெண்ணிற்கு இந்த திருமண பொருத்தங்கள் பார்க்கத் தேவை இல்லை. அதேபோல 40 வயதை தாண்டிவிட்ட ஆணிற்கும் திருமண பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை. அப்படியே பார்த்தாலும் அது எவ்விதத்திலும் அவர்களின் திருமண வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

தினப்பொருத்தம்

மணமக்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளும் விதத்தில் இருவரின் நட்சத்திரங்களும் பொருத்தம் பார்ப்பது தினப்பொருத்தம் எனப்படும். இருவருமே ஆரோக்கியத்துடன் வாழ தினப்பொருத்தம் அவசியம்.

கணப்பொருத்தம்

அதே போல குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக, போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும்.

வசியப் பொருத்தம்

மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு, அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

யோனிப் பொருத்தம்

மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது.

மகேந்திரப் பொருத்தம்

திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. குலம் விருத்தி அடையவும் புத்திரபாக்கியத்திற்காகவும் இந்த பொருத்தம் கண்டிப்பாக அவசியம் இருக்க வேண்டும்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

திருமணம் செய்வதன் முக்கிய அம்சமாகும். தனம், தான்யம் விருத்திக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் இருக்க வேண்டும்.

ராசிப்பொருத்தம்

குடும்ப ஒற்றுமைக்காகவும் உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும். தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமையோடு செயல்பட ராசி அதிபதி பொருத்தம் இருக்க வேண்டும்.

ரஜ்ஜு பொருத்தம்

தம்பதியர் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ ரஜ்ஜூவாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.

வேதை பொருத்தம்

இதே போல வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் கஷ்ட நஷ்டங்களை கடந்து வாழ்க்கையை ஒற்றுமையாக நடாத்த வேதை பொருத்தம் முக்கியமானதாகும்.

நாடிப்பொருத்தம் ஒன்று பார்க்கின்றனர். இதன் மூலம் கணவன், மனைவி இடையேயான ஆயுள் ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. நாடிப்பொருத்தம் இல்லாவிட்டால் ஆண், பெண் இருவரிடையே தோஷம் ஏற்படும்.

வசியப்பொருத்தம்

வசியப்பொருத்தம் இருந்தாலும் வேதைப்பொருத்தம் இல்லாவிட்டால் வேதனைதான்.

அத்தோடு தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தமும் மிக மிக முக்கியம் ஆகும்.

You May Also Like :
இறந்தவர்களை வழிபடும் முறை
சனி பகவான் வழிபடும் முறை