இந்த பதிவில் “தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை” பதிவை காணலாம்.
தவறான விளம்பரங்கள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்குகின்றன. மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவையாக அமைகின்றன.
Table of Contents
தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தவறான விளம்பரங்கள் என்பது
- தவறான விளம்பரங்களின் அம்சங்கள்
- தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்
- தவறான விளம்பரங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
விளம்பரம் என்பது தொன்மைக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. எனினும் சமகால உலகம் விளம்பரங்களின் உலகமாயிருக்கிறது.
சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரங்கள் இப்போது, நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது. தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தவறான விளம்பரங்கள் என்பது
தவறான விளம்பரங்களில் உண்மை விலை, தரம் ஆகியவற்றை குறிப்பிட மறைக்கிறது. ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய முழுமையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய தவறான தகவல்களை அனுப்பும் விளம்பரங்களே தவறான விளம்பரங்களாகும்.
குறிப்பாக தவறான விளம்பரங்கள் விளம்பரத்தில் காட்சிப்படுத்துவது போல் அல்லாமல் சேவைகள், அம்சங்கள், தரம், நிறை என்பவற்றில் தவறான கூற்றுக்கள் இருக்கும்.
தவறான விளம்பரங்களுக்கு உதாரணங்களாக ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள், வழுக்கை தலையில் நீண்ட முடியை வளரவைப்பதாய் கூறும் போலியான ஏமாற்று விளம்பரங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
தவறான விளம்பரங்களின் அம்சங்கள்
தவறான விளம்பரங்களில் குழப்பகரமான மற்றும் தெளிவற்ற வெளிப்பாடுகள் காணப்படும். உண்மையான விலை மற்றும் தரம் முதலானவை குறிப்பிடப்படமாட்டாது. அதாவது நுகர்வோருக்கு வழங்கப்படவேண்டிய முக்கிய தகவல்களைத் தவிர்க்கின்றது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும்.
தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள்
இன்றைய காலகட்டத்தில் தவறான விளம்பரங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான விளம்பரங்கள் பெருகிவிட்டன.
உதாரணமாக உடனடியாக முடி வளருதல், சருமம் உடனடியாக பொலிவு பெறும் போன்ற போலியான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இவை மட்டுமன்றி போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களும் சமூகத்தின் மத்தியில் பரப்பபடுவதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
தவறான விளம்பர பொருட்களை வாங்கும்போது பணம் வீண் விரயமாகின்றது. அதுமட்டுமன்றி தவறான பொருட்களினால் உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பல உடல் நோய்கள், உபாதைகள் ஏற்படுவதற்கும் தவறான விளம்பரங்கள் காரணமாகின்றன.
தவறான விளம்பரங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள்
தவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ (ASCI)-க்கு உள்ளது.
விளம்பரத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதியை ஒரு பொருள் அல்லது சேவை நிறைவேற்றவில்லையென கண்டறிந்தால் நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளம் மூலமாக ஒன்லைனில் புகார் அளிக்கலாம்.
இணையதளத்தில் வரும் அத்தனை விளம்பரங்களையும் கண்மூடித்தனமாக நம்பாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
முடிவுரை
விளம்பரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இவற்றைப் பின்பற்றி விளம்பரப்படுத்தப்படும் போது நுகர்வோருக்குப் பாதிப்பு குறைவடைகின்றது.
பொய்யான விளம்பர உலகில் நாம் நமது அறிவை விரிவு செய்து மெய்ப்பொருளை காண வேண்டும்.
தவறான விளம்பரங்கள் தொடர்பான விழிப்புணர்வுடன் நுகர்வோர் செயற்பட்டால் இத்தகைய விளம்பர பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
You May Also Like : |
---|
சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை |
உணவு கலப்படம் கட்டுரை |