தங்க பத்திரத்தினூடாக தங்கத்தை வாங்குவதானது நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. முதலீட்டை பாதுகாப்பதற்கான ஒரு முறைமையாக காணப்படுகின்றது.
Table of Contents
தங்க பத்திரம் என்றால் என்ன
தங்க பத்திரம் என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்க பத்திரமாகும். இது தங்கத்தை பொருளாக வைத்திருப்பதற்கு மாற்றமான ஒரு முறையாகும். அதாவது முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
மேலும் முதிர்ச்சியின் போது தங்க பத்திரங்கள் பணமாக மீட்டெடுக்கப்படும். முதலீட்டாளர்கள் தங்க கட்டிகளை வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரங்களை வாங்குவது சிறந்தது என பலரும் கருதுகின்றனர்.
இந்த முறைமையானது ஆபரணம் மற்றும் கட்டித்தங்கம் போன்றவற்றை வாங்குவதனை குறைப்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டது. ஆபரண தங்கங்களை போன்று இந்த பத்திரங்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைப்பதன் மூலமாக கடன் பெற முடியும்.
தங்க பத்திரத்தின் முக்கியத்துவம்
தங்கத்தை பத்திரமாக காப்பாற்றி வைத்திருக்க இந்த முறைமையானது அவசியமாகின்றது. தங்க பத்திரமானது மெய் நிகர் தங்கம் என்பதால் திருட முடியாது மேலும் அரசாங்கத்தின் உத்தரவாதம் காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் எடை மதிப்பு மாறாமல் காணப்படும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்துதலாக இந்த முறைமையானது அமைந்து காணப்படுகின்றது. அதாவது தங்கத்தை இறக்குமதி செய்வதன் ஊடாக பொருளாதாரமானது பாதிப்படைகின்றது. அதே சமயம் தங்க பத்திரமானது இங்கு தங்கமாக இறக்குமதி செய்யப்படவில்லை. இது தங்கத்திற்கு சமமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படாது.
பாதுகாப்பான முதலீட்டிற்கு வித்திடுகின்றது. தங்கத்தினை இழந்தால் எமது மொத்த முதலீட்டிலும் இழப்பு ஏற்படும். அதுவே தங்க பத்திரமாக காணப்படுமேயானால் அரசாங்க உத்தரவாதம் காணப்படும். இதனால் பணம் ஈட்டுவது தங்கத்தின் விலைக்கேற்ப மாறுபடுமே தவிர இழக்க நேரிடாது என்பதனூடாக இந்த முறைமையின் சிறப்பு எடுத்துக்காட்டப்படுகின்றது.
இறையாண்மை தங்க பத்திரமும் பாதுகாப்பான முதலீடும்
தங்க பத்திரங்கள் கடன் நிதிகள் என்ற வகையின் கீழ் வருகின்றன. மேலும் அவை தங்கத்தை வாங்குவதற்கு மாற்றாக நவம்பர் 2015ல் இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
அதாவது முதலீட்டாளர்கள் வழங்கப்பட்ட விலையை ரொக்கமாக செலுத்துவதினூடாக முதிர்வு காலங்களில் பத்திரங்கள் பணமாக மீட்டெடுக்கப்படும்.
சந்தை அபாயங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதனால் இறையாண்மை தங்க பத்திரங்கள் அரசினால் வெளியிடப்படுவதால் பாதுகாப்பான முதலீட்டு கருவியாக தொழிற்படுகின்றது.
இறையாண்மை தங்க பத்திரங்கள் அரசினால் வெளியிடப்படுவதால் இதற்கென்று ஒரு காலக்கெடு முன்கூட்டியே முடிவு செய்து நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இந்த பத்திரமானது முதலீட்டாளர்களின் பெயரில் தவணைகளாக வழங்கப்படுகின்றன. இதனூடாக முதலீட்டு பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது.
தங்கப் பத்திரங்கள் இந்திய அரசாங்கப் பங்குகளின் வடிவத்தில் வழங்கப்படுகின்ற போது அவை ஒரு வகையான பாதுகாப்பாக காணப்படுகிறது. மேலும் இந்த பத்திரங்கள் கடனுக்கான பிணையமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
தங்கப் பத்திரத்தின் நன்மைகள்
ஒரு முதலீட்டாளர் முதிர்வுக்கு முன் பத்திரங்களை மாற்றினால் முதலீட்டாளர் குறியீட்டு பலன்களை பெறுவார். மேலும் சம்பாதித்த வட்டி மற்றும் மீட்டெடுப்பு பணத்தின் மீது உத்தரவாதம் காணப்படும்.
கடன்களுக்கு எதிரான பிணையமாக அல்லது பத்திரமாக தங்கப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் தங்க பத்திரங்களை தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் 5 வருட பதவி காலத்திற்கு பிறகு வர்த்தகம் செய்ய முடியும்.
Read More: சந்தை என்றால் என்ன