தக்காளி குழம்பு வைப்பது எப்படி

Thakkali Kulambu Seivathu Eppadi

இந்த பதிவில் தக்காளி குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

நாம் குழம்பு செய்வதற்கு பல மரக்கறிகளைப் நாம் பயன்படுத்துகின்றோம். ஏனைய மரக்கறிகளை வைத்து சமயல் செய்வதையும் விட தக்காளிகளை வைத்து சமையல் செய்வது சுலபமானது.

தக்காளி குழம்பை சாதம்⸴ இட்லி⸴ தோசை⸴ பரோட்டா போன்றவற்றிற்கு எல்லாம் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். தக்காளி குழம்பு கமகமவென்று வாசத்தோடு சமைக்கும் போதே சாப்பிடத் தூண்டும்.

என்னதான் கமகமவென்று வாசத்தோடு சமைத்தாலும் பாசத்தோடு சமைத்தால் தான் சமைத்த உணவுக்கு கூடுதல் ருசி. இப்போது பாசத்தோடு தக்காளி குழம்பு சமைக்கலாமா? தக்காளி குழம்பு ருசியாக சமைப்பது எப்படி எனப் பார்க்கலாம் வாங்க!

தக்காளி குழம்பு வைப்பது எப்படி

தேவையான பொருட்கள்

தக்காளி6
சின்ன வெங்காயம்10
பூண்டுஒரு கைப்பிடி
சீரகம்1 டீஸ்பூன்
மிளகு1 டீஸ்பூன்
சோம்பு1 டீஸ்பூன்
இஞ்சிசிறிதளவு
தேங்காய் எண்ணெய்தேவையான அளவு
கறிவேப்பிலைதேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு இஞ்சி⸴ ஒரு கைப்பிடி அளவு பூண்டு⸴ நறுக்கிய சின்ன வெங்காயம்⸴ மீடியம் சைஸ் 1 தக்காளி⸴ தேவையான அளவு உப்பு⸴ ஒரு டீஸ்பூன் சீரகம்⸴ ஒரு டீஸ்பூன் மிளகு⸴ ஒரு டீஸ்பூன் சோம்பு இவை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். வதங்கியதும் அடுப்பை ஆப் செய்து வைக்கவும்

நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.

குழம்பு தாளிப்பதற்காக குக்கரை சூடு பண்ணி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கூடவே ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொணிந்ததும் ½ டீஸ்பூன் சோம்பு⸴ ஒரு நட்சத்திர சோம்பு⸴ பட்டை கூடவே இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் ஒரு பெரிய சைஸ் பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் 5 மீடியம் சைஸ் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும். கூடவே ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

அடுத்து ஏற்கனவே வதக்கி வைத்த விழுதைச் சேர்த்து கலந்து விடவும்.

பின்பு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்⸴ ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள்⸴ ஒரு டீஸ்பூன் தனியாத்தூள்⸴ ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடவும். ஒரு விசில் வந்ததும் அதை வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

சுவையான தக்காளி குழம்பு ரெடி!!!

You May Also Like :

தக்காளி தொக்கு செய்வது எப்படி

உளுந்தங்களி செய்வது எப்படி