சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை

sevai thurai valarchi katturai in tamil

இந்த பதிவில் “சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

பிறதுறைகளோடு இணைந்து நாட்டின் சேவைத்துறை மிகச்சிறப்பாக இயங்குவதன் வாயிலாக தான் ஒரு நாடு சிறந்த ஒரு நாடாக வளர முடியும்.

சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேவை துறைகள் என்பன
  3. இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு
  4. பயன்கள்
  5. சவால்கள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வது மூன்று பெருந்துறைகளாகும் அவையாவன சேவைத்துறை, உற்பத்திதுறை, விவசாயத்துறை என்பனவாகும். இத்துறைகளின் பங்குதான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கின்றது.

இத்துறைகள் மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்குவதுடன் பரஸ்பர சேவைகளை ஒவ்வொரு பிரஜைகளுக்கும் கிடைக்க செய்து வருகின்றது. இதனுடைய வளர்ச்சி தொடர்பாக இக்கட்டுரையில் நோக்குவோம்.

சேவைதுறைகள் என்பன

இந்தியாவை பொறுத்தவரையில் கணிசமான தொகை மக்கள் சேவைத்துறையில் வேலைசெய்கின்றனர். இதற்கு போதுமான வருமானம் மற்றும் இதர சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதனால் மக்கள் இத்துறைகளில் அதிக நாட்டம் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மருத்துவம், கல்வி, போக்குவரத்து, நீதி நிர்வாகம் போன்ற துறைகள் பிரதானமாக இத்துறையினுள் அடங்குகின்றன. இத்துறைகள் சிறப்பாகவும் இயங்கி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு

இந்தியா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வதற்கு அதன் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் தரமான கல்வி சேவை, மருத்துவசேவை மற்றும் அதிவிரைவான குறைந்த கட்டணத்திலான போக்குவரத்து சேவைகள் நாடெங்கிலும் விருத்தியடைய செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக உலகின் மிகப்பெரிய புகையிரத சேவை இந்தியாவில் உள்ளது. மற்றும் மிக்சிறந்த புத்திஜீவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொழில்முனைவோர்கள் போன்றவர்களின் உருவாக்கத்தில் இத்துறைகள் பங்களிக்கின்றன.

பயன்கள்

இந்த சேவைத்துறையானது வளர்ச்சியடைவதன் வாயிலாக உள்நாட்டு மக்களுடைய நலவாழ்வானது அதிகரிக்கின்றது. அசௌகரியங்கள், இலஞ்சம், ஊழல் போன்றன ஒழிக்கப்பட்டு உயர்வான சேவையானது நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அவ்வாறே சுற்றுலாதுறை சிறப்பாக இயங்குவதன் மூலமாக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருகை தரும் சந்தர்ப்பம் உருவாகும் இவ்வாறு பலவகையான பயன்கள் சேவைத்துறையின் வளர்ச்சி மூலமாக கிடைக்கின்றது.

சவால்கள்

இந்த சேவைத்துறையில் பலவகையான சவால்கள் காணப்படுகின்றன. அரசாங்கம் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் இந்த சேவைகளில் சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பது பாரிய சவாலாகும் இதனால் திட்டங்கள் மக்களுக்கு பயனற்றதாகி விடுகின்றன.

மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளின் சுயநலம் மற்றும் இலஞ்சம், ஊழல் போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை நாட்டின் வளர்ச்சியில் ஏற்படுத்துவதனை அவதானிக்க முடிகின்றது.

முடிவுரை

எவ்வாறாக இருப்பினும் பிறதுறைகளோடு இணைந்து நாட்டின் சேவைத்துறை மிகச்சிறப்பாக இயங்குவதன் வாயிலாக தான் ஒரு நாடு சிறந்த ஒரு நாடாக வளர முடியும்.

உதாரணமாக ஐரோப்பிய மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் சேவைத்துறையில் மிகவும் சிறப்பாக வளர்ந்துள்ளமையினால் தான் அவர்களால் நிலைத்து நிற்க கூடிய அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடிகின்றது என்றால் மிகையல்ல.

You May Also Like :
இளம் வயது திருமணம் கட்டுரை
வாய்மையே வெல்லும் கட்டுரை