சூரிய சக்தி என்றால் என்ன

சூரிய சக்தி

அறிமுகம்

இயற்கை நமக்கு வழங்கிய மிகப் பெரிய கொடை சூரிய சக்தி ஆகும். சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் மூலமாகும்.

சூரிய ஒளி பூமியால் பெறப்படும் ஆற்றலின் மிகப்பெரிய ஆதாரமாகும். ஆனால் பூமியின் மேற்பரப்பில் அதன் தீவிரம் உண்மையில் மிகவும் குறைவாகவே உள்ளது. கதிர் வீச்சுக்கள் புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப்படுகிறது.

பூமியின் வளிமண்டலம் மற்றும் மேகங்கள், உள்வரும் சூரிய ஒளியில் 54 சதவீதத்தை உறிஞ்சுகின்றது அல்லது சிதறடிக்கின்றது. இதில் 45 சதவீதம் அகச்சிவப்பு கதிர்வீச்சு மற்றும் சிறிய அளவு புற ஊதா மற்றும் மின்காந்தக் கதிர்வீச்சின் பிற வடிவங்கள் போன்றவையாகும்.

இதனால் நிலத்தை அடையும் சூரிய ஒளி கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும். இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது.

சூரிய சக்தி என்றால் என்ன

நாம் சூரியனிலிருந்து சக்தியினை நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது. சூரிய சக்தியானது சூரிய கதிர்வீச்சு என்றும் அழைக்கப்படுகிறது.

சூரிய சக்தி என்பது சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளி மூலம் மின் சக்தியை உருவாக்குவது ஆகும். சூரிய ஒளித் தகடுகள் சூரிய ஒளியை மின் சக்திகளாக மாற்றுகின்றது. பின் சூரிய ஒளியினை வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகின்றது.

சூரிய சக்தியின் பயன்கள்

சமீப காலங்களில் சூரிய கதிர்வீச்சிலிருந்து வரும் ஆற்றலின் பயன்பாடுகள் காரணமாக சூரிய சக்தியின் பயன்பாடு விரிவடைந்துள்ளது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை முதல் கைக்கடிகாரம் வரை சூரிய சக்தியின் பயன்பாடுகள் ஏராளம்.

மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு அல்லது வெப்பமேற்றுவதற்கு சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்த வண்ணமே உள்ளது.

மாசுபடுத்தும் வாயுக்களை உற்பத்தி செய்யாது சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதால் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.

சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளியை பேனல்கள் வழியாக மின்சாரமாக மாற்றுகிறது, சூரிய மின் தகடுகள் மூலம் தான் வீடு மற்றும் அலுவலகத்திற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடிகின்றது. இந்த மின் சக்தி பெரும்பாலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் மின் செலவைக் குறைக்க உதவுகின்றது.

புதுப்பிக்க முடியாத நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்கான ஒரு வரம் சூரிய சக்தியாகும்.

காற்றின் சுழற்சிக்கான முதன்மை ஊக்கியாக சூரிய ஆற்றல் உள்ளது. சோலார் குக்கர்கள் அல்லது அவன்கள் சூரிய சக்தியின் பயன்பாடுகளில் ஒன்றாகும். இது வீட்டு உபயோகப் பொருட்களாக பிரபலமடைந்து வருகிறது.

சூரிய சக்தியின் பயன்பாடுகளில் ஒன்றாகச் சோலார் விளக்குகள் காணப்படுகின்றன. சாலை பாதுகாப்பு விளக்குகள் முதல் தெரு விளக்குகளுக்கு வரை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சோலார் விளக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், சூரிய ஆற்றலின் பயன்பாடுகளில் ஒன்றாக சூரிய போக்குவரத்தும் அமைந்துள்ளது. சூரிய ஆற்றல் உற்பத்தியானது சத்தமில்லாதது. எனவே காற்றாலை ஆற்றல் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஒலி மாசுபாட்டை குறைக்கின்றது.

You May Also Like :
மின்சார சிக்கனம் கட்டுரை
மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு