பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அதிசயங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்று ஒரு ஆச்சரியமே சூரிய கிரகணம் ஆகும்.
கிரகணங்கள் பற்றிய நிறைய நம்பிக்கைகள் புராணக் கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் நிலவு வரும் போது சூரியனை நிலவு மறைக்கின்றது இதுவே கிரகணமாகும்.
சூரிய கிரகணம் நிகழும் போது பல்வேறு வகையான நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றது.
அதாவது சீனாவில் ராகன் சூரியனை உண்பதாக நம்பிக்கை உள்ளது. இந்துக்கள் சூரிய கிரகணம் நிகழும் போது ராகுவும் கேதுவும் சூரியனை விழுங்குவதாக நம்புகின்றனர்.
Table of Contents
சூரிய கிரகணம் என்றால் என்ன
சூரியன், நிலவு, பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது. அதாவது சூரியனை நிலவு நேர்கோட்டில் மறைப்பதைச் சூரிய கிரகணம் என்று அழைப்பர்.
சூரியனை நிலவு மறைப்பது போல் தோன்றும். சில இடங்களில் முழுதாய் சூரிய கிரகணம் தோன்றும், சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.
பொதுவாக மூன்று விதமாக சூரிய கிரகணம் நடைபெறுகின்றது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் ஆகியவையே அவையாகும்.
முழு சூரிய கிரகண நிகழ்வு நடைபெறும் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர்கோட்டில் இருக்கும். சூரியனை விடச் சந்திரன் மிகச் சிறியளவுடையது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடுகின்றது.
இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை மற்றும் சூரிய ஒளி பூமியை அடையாமல் முழு இருட்டாக இருக்கும். இரவு போல காட்சி தரும். பகலில் சூரிய வெளிச்சம் தெரியாமல் போனால் மனிதர்களுக்குக் குழப்பம் வராது.
ஆனால் விலங்குகள் பறவைகளுக்கிடையே சில குழப்பங்கள் வரும். பூத்த மரங்கள் கூட மறுபடியும் வாட ஆரம்பித்துவிடும், ஓணாய்கள் ஊளையிடும், பறவைகள் தங்களது கூடுகளுக்குத் திரும்பிப் போக ஆரம்பித்துவிடும்.
பகுதி சூரிய கிரகணம் என்பது சூரிய கிரகணத்தின் இரண்டாவது வகையாகும். பகுதி சூரிய கிரகணத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பது சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இதுவே நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும். இதனை வருடாந்த சூரிய கிரகணம் எனவும் கூறுவர்.
சூரிய குடும்பம்
சூரின் மற்றும் அதைச் சுற்றிவரக் கூடிய கோள்கள் சேர்ந்தது சூரியக் குடும்பமாகும். சூரியன் என்பது ஓர் விண்மீன் ஆகும். சூரியனில் ஈர்ப்பு விசை இருப்பதால் கோள்கள் யாவும் அதனுடைய சுற்றுவட்டப் பாதையில் நிலையாகச் சுற்றுகின்றன.
சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவையாவன
- புதன்
- வெள்ளி
- பூமி
- செவ்வாய்
- வியாழன்
- சனி
- யுரேனஸ்
- நெப்டியூன்
Read more: கரிநாள் என்றால் என்ன