சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

suthanthirathirku piraku indiavin valarchi katturai in tamil

இந்த பதிவில் “சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

இந்திய நாடு சுதந்திரத்துக்கு பின்னர் எல்லா துறையிலும் பல சாதனைகளை படைத்து முன்னேறி வருவது மகிழ்ச்சி தருகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கைத்தொழில் மயமாக்கம்
  3. பொருளாதார வளர்ச்சி
  4. தொழில்நுட்ப வளர்ச்சி
  5. இராணுவ வளர்ச்சி
  6. விண்வெளி ஆய்வு
  7. முடிவுரை

முன்னுரை

1947 ஆகஸ்ட் 14 இல் இந்தியா பிரித்தானிய அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று கொண்டது. அன்றிலிருந்து இன்று வரை சுதந்திரமடைந்த ஒரு ஜனநாயக நாடாக இருப்பதனால் இந்தியா பல துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது.

உலக அரங்கில் இந்தியா பல துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகின் பலம் பொருந்திய நாடுகளின் வரிசையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, விளையாட்டு என இந்தியாவின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

கைத்தொழில்மயமாக்கம்

உலகளவில் இரண்டாவது உயர்ந்த சனத்தொகை கொண்ட இந்தியாவில் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றதுடன் கைத்தொழில் உற்பத்திக்கு தேவையான மூலபொருட்கள் அதிகமாக காணப்படுவதனாலும் அதிகளவில் கைத்தொழில்கள் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ளன.

அத்தோடு கைத்தொழில் நகரங்களும் உருவாகியுள்ளன. இரும்புருக்கு கைத்தொழில், கப்பல்கட்டும் கைத்தொழில், ஆடைதொழிற்சாலைகள், மோட்டார்வாகன கைத்தொழில் போன்றன இந்தியாவில் புகழ்பெற்றவையாக காணப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சி

சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவில் கைத்தொழில்கள் மற்றும் சுற்றுலாத்துறை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு என்பன அதிகரித்தமையால் மிகவேகமாகவே இந்தியாவின் மொத்த தேசிய வருமானம் அதிகரிக்க துவங்கியது.

இந்தியாவில் இருந்து பல தொழிற்சாலைகள் செயற்பட்டுவருவதனால் உற்பத்தியும் அதிகரித்தமையினால் மொத்த தேசியவருமானம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் மிகச்சிறந்த வர்த்தக நாமங்கள் தமது உற்பத்திகளை ஏனைய நாடுகளுக்கு உற்பத்தி செய்தல் மற்றும் விவசாயத்துறையின் தீவிர வளர்ச்சி போன்றன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவின.

தொழில்நுட்ப வளர்ச்சி

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சின் விளைவால் கணினி தொழில்நுட்பம், தொலைபேசிகள் வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம், வாகனங்களின் வடிவமைப்பு, பொறியியல்துறை, இராணுவ துறை மற்றும் மருத்துவ துறை என அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.

சிறந்த தொழில்நுட்ப வளர்சியை கொண்டுள்ள இந்தியா உலகளவில் முக்கியமான இடத்தில் சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட நாடாக காணப்படுகிறது.

இராணுவ வளர்ச்சி

இந்தியா தன்னை சுற்றியுள்ள நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, பங்களாதேஸ் போன்ற நாடுகளின் நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து இந்தியாவை பாதுகாக்க உலகின் மிக சிறந்த இராணுவ கட்டமைப்பை கொண்டுள்ளது.

உலகின் பலமான இராணுவங்களில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. பல பில்லியன் டாலர்களை இதற்காக செலவு செய்து தனது பாதுகாப்பு துறையில் இந்தியா வளர்சி கண்டுள்ளது.

இந்தியாவின் எல்லை போர்களை சமாளிக்க இந்தியா எப்போதும் தனது இராணுவ பலத்தை வளர்ச்சி அடைய செய்தவண்ணம் உள்ளது.

விண்வெளி ஆய்வு

சுதந்திரத்தின் பின்னர் தனது தடத்தை இந்தியா விண்வெளியில் பதித்திருக்கிறது. “இஸ்ரோ” எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு துறையின் மூலம் “மங்கல்யான், சந்திராயன்” போன்ற விண்வெளி ஓடங்களை செவ்வாய் சந்திரன் போன்றவற்றுக்கு அனுப்பி இருந்தது.

தற்பொழுது சூரியனை ஆய்வு செய்வதற்காக “ஆதித்யன்” என்ற விண்கலத்தை அனுப்பவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகின்றது.

முடிவுரை

இந்திய நாடு சுதந்திரத்துக்கு பின்னர் எல்லா துறையிலும் பல சாதனைகளை படைத்து முன்னேறி வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அழிப்பதாக இருந்தாலும் இன்னும் சமூக ரீதியாக அபிவருத்தி மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

அடிநிலை மக்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றனர், விவசாயிகள் வாழ்வதற்கு போராடுகின்றனர், ஏழை மாணவர்கள் கல்வி கற்க போராடுகின்றனர்.

இவ்வாறு பல பிரச்சனைகள் இடம்பெற அதிகார மேல் வர்க்கத்தவர்களினுடைய அதிகார துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் இவை போன்ற தவறுகள் தான் காரணமாக இருக்கிறது. இவைகள் மாறினால் தான் இந்தியா மிக சிறந்த வளர்ச்சியினை பெற்று கொள்ள முடியும்.

You May Also Like :

அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை

தூய்மை பற்றிய கட்டுரை