மனிதனின் தேவைகள் காரணமாக பல வியாபாரங்கள் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தியும், சந்தைப்படுத்தலும் வியாபாரத்தின் இரண்டு முக்கியமான விடயங்கள் ஆகும்.
ஒரு வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பெரும்பாலும் ஒரு தொழில் மூலம் கிடைக்கும் மாத சம்பளத்தை விட அதிகமாகவும் காணப்படலாம். ஆனால் வியாபாரம் என்பது எப்போதும் இலாபம் கிடைக்கக் கூடியதாக மாத்திரம் அமையாது. வியாபாரம் என்பதில் இலாபம் மற்றும் நஷ்டம் என்பன எப்போதும் இணைந்தே காணப்படும்.
Table of Contents
வியாபாரம் என்றால் என்ன
பொருட்களின் உற்பத்திக் கூடத்தில் இருந்து நுகரும் மையங்கள் வரை நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் வியாபாரம் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது இலாபம் ஈட்டும் நோக்கில் பொருட்களையும், சேவைகளையும் வாங்கி விற்பது மற்றும் பரிமாற்றம் செய்வது வியாபாரமாகும்.
வியாபாரம் வேறு சொல்
- வணிகம்
- வாணிபம்
- வாணிகம்
- வர்த்தகம்
- பண்டமாற்று
உள்நாட்டு வியாபாரம்
சந்தை நடவடிக்கைகளான பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதும், விற்பதும் ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெற்றால் அது உள்நாட்டு வியாபாரம் எனப்படும்.
இந்த உள்நாட்டு வியாபாரத்தை உள்ளூர் வியாபாரம் எனவும் அழைக்கின்றனர். உள்நாட்டு வியாபாரம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது.
- சில்லறை வியாபாரம்
- மொத்த வியாபாரம்
சில்லறை வியாபாரம் என்றால் என்ன
ஒரு நுகர்வோர் இறுதி பயன்பாட்டிற்காக நேரடியாக சிறிய அளவில் ஒரு ஒற்றைப் புள்ளியில் (வளாகங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை) இருந்து பொருட்களை விற்பனை செய்வது சில்லறை வியாபாரம் எனப்படும்.
சில்லறை வியாபாரிகள் ஒரு பொருள் தயாரிப்பாளரிடம் இருந்து அல்லது ஒரு மொத்த வியாபாரியிடம் இருந்து பொருட்களை இலாப நோக்கில் பெற்று விற்பனை செய்கின்றார்கள்.
சில்லறை விற்பனையாளர்கள் விநியோக சங்கிலி என அழைக்கப்படுகின்ற ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு பகுதியாக காணப்படுகின்றனர். சில்லறை விற்பனையை வெவ்வேறு விநியோக முறையிலோ, ஒவ்வொரு வீடாகவோ அல்லது பல சிறு கடைகளின் மூலமோ செய்யப்படுகிறது.
சில்லரை வியாபாரிகளின் பண்பு நலன்கள்
- சில்லறை வியாபாரிகள் பல்வேறு பொருட்களின் வணிகத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
- சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம், மொத்தமாக பொருட்களை வாங்கி அவற்றை சிறு அளவில் நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள்.
- முக்கிய சந்தை பகுதிக்கு உள்ளேயோ அல்லது அருகிலேயோ சில்லறை விற்பனை நிலையங்கள் இடம் பெறும்.
மொத்த வியாபாரம் என்றால் என்ன
மொத்த வியாபாரம் என்பது பொருட்களை உற்பத்தி செய்பவர்களிடம் மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த அளவில் விற்கும் நடைமுறை வணிக செயல்பாடு ஆகும்.
மொத்த வியாபாரிகள் வணிகப் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு அல்லது பிற வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்களே தவிர நுகர்வோருக்கு நேரிடியாக விற்பனை செய்ய மாட்டார்கள்.
மொத்த வியாபாரிகளின் பண்பு நலன்கள்
- மொத்த வியாபாரிகள் உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்குகின்றனர்.
- மொத்த வியாபாரிகள் பொருட்களை மொத்தமாக வாங்கி, சிறிய அளவில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
- இவர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின், பல்வேறு வகைகளை விற்பனை செய்கின்றனர்.
Read more: ரணகள்ளி மருத்துவ பயன்கள்