ஒவ்வொரு மாதமும் தனி சிறப்பினை உடைய மாதமாகவே காணப்படும். அந்த வகையில் சித்ரா பௌர்ணமியானது சித்திரை மாத பௌர்ணமியில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.
Table of Contents
சித்ரா பௌர்ணமி என்றால் என்ன
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் சைவர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு விழாவாகும். இந்நாளில் நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். அதாவது சூரியனும் சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பௌர்ணமி நாளாகும்.
சித்ரா பௌர்ணமி நாளின் சிறப்பு
சித்ரா பௌர்ணமி நாளில் குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆயுள் பலத்தை அதிகரிக்கவும் நோய் நொடிகள் இன்றி இருக்கவும் கடவுளிடம் பிராத்தித்தால் இனி வருகின்ற காலங்களில் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்பது இந்நாளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
இந்நாளில் தானம் செய்வது மிக முக்கியமான தொன்றாகவே காணப்படுகின்றது. ஏனெனில் இந்நாளில் தானம் செய்யும் போது அதன் பலன் பல்வேறு வழிகளில் எம்மை வந்து சேரும்.
சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவத்தில் ஒன்றாக பல்வேறுபட்ட ஆன்மீக வழிபாடுகள் மற்றும் பூஜைகள் இந்நாளில் சிறப்பாக இடம் பெறுகின்றது.
சித்ரா பௌர்ணமி நாளில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவதால் சாபங்கள் மற்றும் பித்ரு தோஷங்கள் போன்றவை வாழ்வை விட்டு அகன்று நல் வாழ்க்கையை வாழ்வதற்கு வழியேற்படுத்தி தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நாளில் கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி கிடைக்கும் என குறிப்பிடலாம். ஏனெனில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியானது ஏனைய பௌர்ணமிகளை விட சிறப்பிற்குரியதாகும்.
சித்ரா பௌர்ணமியின் வழிபாட்டு முறைமை
சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி நாளில் அம்பாலின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்தல் வேண்டும். பின்னர் ஆபரணங்களை அணிவித்து வழிபாட்டில் ஈடுபடுவது சிறந்ததாகும்.
மேலும் அம்பாலுக்கு மஞ்சள் கலந்த சாதத்தினை படைத்து பின்பு கிராம்பு, ஏலம், கற்பூரம் சேர்த்த தாம்பூலத்தில் நை வைத்தியம் படைத்தல் வேண்டும். இவ்வாறாக அம்பாளை வழிபாடு செய்வதன் மூலம் திருமண யோகம் கூடி வரும் என்று நம்பப்படுகின்றது.
இந்நாளில் சித்ரகுப்த வழிபாட்டினையும் சத்திர வழிபாட்டினையும் மேற்கொள்வது சிறப்பானதாகும்.
அதாவது வீட்டில் விளக்கேற்றி சித்ரா அன்னம் எனப்படும் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாட்டில் ஈடுபடல் வேண்டும். இவ் வழிபாட்டில் பால், தயிர் போன்றன சேர்த்துக் கொள்ளக் கூடாது.
சித்ரா பௌர்ணமி நாளானது இறைவனின் திருநாம கீர்த்தனத்திலும், வழிபாட்டிலும் ஈடுபடுதலானது மிக முக்கியமான தொன்றாகும். இவ்வாறாக சித்ரா பௌர்ணமி நாளானது தன்னகத்தே பல்வேறுபட்ட நல்ல விடயங்களை கொண்டுள்ளதோடு அந்நாளில் அனைவரது பாவ செயல்களும் அழிந்து புண்ணியங்களை அதிகரிக்க இந்த நாளானது துணைபுரிகின்றது.
சித்திரை மாதத்தில் ஒரு சிறப்பு மிக்கதொரு நாளாக சித்ரா பௌர்ணமி நாள் அமைந்து காணப்படுகின்றது. மேலும் இந் நாளில் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதினூடாக கடவுளின் அருள் எம்மை வந்து சேரும்.
Read More: களத்திர குரு என்றால் என்ன