சித்த மருத்துவத்தின் பயன்கள்

சித்த மருத்துவம் பயன்கள்

ஒவ்வொரு நாட்டுக்கும் பாரம்பரிய மருத்துவம் என்று ஒன்று உண்டு. ஆங்கில மருத்துவத்தின் வருகைக்கு முன்னர் அனைத்து நோய்க்குமான தீர்வு சித்த மருத்துவம் சார்ந்தே இருந்தது.

இந்த வகையில் மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் பழமையும், புதுமையும் வாய்ந்தது.

சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு.

சித்த மருத்துவம் பல விதமான நன்மைகளை நமக்கு தரக்கூடியவை. சித்த மருத்துவத்தின் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

சித்த மருத்துவத்தின் பயன்கள்

#1. சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும்.

இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி போன்ற பல நோய்களையும் குணப்படுத்த முடியும்.

#2. பக்க விளைவுகள் ஏற்படாது.

ஒவ்வொரு மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் அது முழுமையாக சுத்தி (Purification) செய்யப்படுகிறது. மருத்துவம் என்பது நிச்சயம் பாதுகாப்பானது.

இயற்கையாகவே தோன்றிய செடி, கொடிகளுக்கு மருத்துவ குணம் உண்டு. இதை வைத்து சித்த மருத்துவம் செய்யப்படுவதால் இது பக்கவிளைவுகள் அற்றது.

#3. நுரையீரல் பிரச்சனையை சரி செய்யும்.

சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். தூதுவளையை பயன்படுத்தி சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.

10 தூதுவளை இலைகளை எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சளி இருமல் பிரச்சினைகள் நீங்கும்.

#4. விலை மலிவு.

சித்த மருத்துவத்தில் பயன்படுகின்ற மருந்து பொருட்கள் தழை, மரம், காய், கனி, பூ, வேர் முதலியவற்றாலானது. இதனால் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.

#5. பொருள்கள் கிடைப்பது வெகு சுலபம்.

இயற்கை மூலம் கிடைக்கும் பொருட்களையே கொண்டு சித்த மருத்துவம் செய்யப்படுவதால் பொருட்கள் இலகுவில் கிடைக்கும்.

#6. சுலபமாகவும், குறுகிய காலத்திலும், மருந்துகளைத் தயாரிக்க முடியும்.

ஆங்கில மருந்துகளைத் தயாரிப்பதை விட சித்த மருத்துவ மருந்துகளைத் தயாரிப்பது இலகுவானது. இயற்கையான பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது. இயற்கை மூலிகைகள் சுலபமாகக் கிடைக்கக்கூடியவை என்பதால் மருந்துகளையும் குறுகிய காலத்தில் தயாரிக்கலாம்.

#7. நீண்ட காலத்திற்கு மருந்துகள் கெடாமல் இருக்கும்.

சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அதிகமானவை பல ஆண்டுகள் கெடாது.

#8. அதிகமாக அறுவை சிகிச்சைகள் கிடையாது.

சித்த மருத்துவமானது நீண்ட நாள்பட்ட நோய்களைக் கூட குணப்படுத்த கூடியது. அறுவை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தக் கூடிய நோய்களைக் கூட சித்த மருத்துவ முறைகள் மூலம் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முடியும்.

#9. உடலில் குறைந்த சத்துகளை நிறைக்க பயன்படுகின்றது.

உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துக்களை அதிகரிப்பதற்கு சித்த மருத்துவ மூலிகைகள் பயன்படுகின்றன.

#10. ஒரு மருந்தை பல வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, கடுக்காய் தூளை வெறும் தண்ணீருடன் சாப்பிட்டால் ஒரு வியாதியும், மோருடன் சாப்பிட்டால் மற்றொரு வியாதியும், தேனுடன் கலந்து சாப்பிட்டால், வேறு வியாதியும் குணமாகும்.

You May Also Like :
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
நோய் வரக் காரணங்கள்