சித்திரை மாத சிறப்புகள்

chithirai matha sirappugal

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். அந்த வகையில் தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர். சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன.சித்திரை மாத சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

சித்திரை மாத சிறப்புகள்

சித்திரை முதல் நாள்.

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.

அதனால்தான் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இன்னாளில் அதிகாலை எழுந்ததும் மங்கள பொருட்களைத் தான் முதலில் பார்ப்பார்கள். காரணம், அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

சித்திர குப்தன்.

சித்திர குப்தன் தோன்றியதும் சித்திரா பௌர்ணமியன்றுதான். யமனுக்கு உதவியாளராக பணிக்கப்பட்டு மக்களின் பாவங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணக்கெடுத்துக் கொண்டும் இருப்பவர் இவரே ஆவார்.

சித்திரை மாதத்தில் நிகழ்ந்த அவதாரங்கள்.

உயிரினம் வளர்வதற்கு காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. சித்திரை மாதத்தில் தான் மகான்கள் அவதரித்துள்ளனர். திருமாளின் நரசிம்ஹ அவதாரம், பசராமர் அவதாரம் போன்றன நிகழ்ந்தது இம்மாதத்தில் ஆகும்.

சித்ரா பௌர்ணமி.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியே “சித்ரா பௌர்ணமி” ஆகும். சூரியனின் மறைவும், சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இதுவாகும்.

மீனாட்சி திருக்கல்யாணம்.

மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவது சித்திரை மாதத்தில் தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும் என்பது ஐதீகமாகும்.

அட்சய திருதியை வரும் பொன்னான மாதம் சித்திரை மாதம் ஆகும்.

அட்சயதிருதி நாட்களில் தங்கத்தாலான ஆபரணங்கள் வாங்கினால் வருடம் முழுவதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

கை நீட்டம்.

சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர். அதுமட்டுமன்றி புது வருடப் பிறப்பன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று நாணயம் பெறுவார்கள் இதுவும் கைநீட்டம் என்று கூறப்படுகிறது.

இந்திர விழா.

இந்திர விழா தேவர்களின் தலைவனான இந்திரனைச் சிறப்பிக்க எடுக்கப்பட்ட விழாவாகும். சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மதத்தவர்களுக்கும் விழாக்கள் நிறைந்த மாதம்.

சித்திரை மாதத்தில் சைவம், வைணவம் மட்டுமல்ல, ஜைனர்களுக்கும் கூட விழாக்கள் நிறைந்த மாதமாக இருக்கிறது என்பது இம்மாதத்திற்குரிய சிறப்பாகும்.

இளவேனில் காலம்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. இக்காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.

You May Also Like :
தை மாதம் சிறப்புகள்
அமாவாசை அன்று செய்ய கூடாதவை