சப்ஜா விதை நன்மைகள் தீமைகள்

Sabja Seeds Benefits In Tamil

சப்ஜா விதை நன்மைகள் தீமைகள்

இந்த பதிவில் “சப்ஜா விதை நன்மைகள் தீமைகள்” பற்றி பார்க்கலாம்.

திருநீற்று பச்சிலை எனப்படும் ஒரு வகையான துளசி செடியின் விதையே சப்ஜா விதை என்று சொல்லப்படுகின்றது. இந்த சப்ஜா விதை நன்மைகள் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது.

நிலவேம்பு கசாயம் பயன்கள்

சப்ஜா விதை நன்மைகள்

உடல் சூட்டை குறைக்கும்

உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையினை இரவு படுக்கைக்கு முன் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதையுடன் பால் அல்லது நாட்டு சக்கரை கலந்து குடித்தால் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது.

மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சலையும் இது குணப்படுத்தும்.

மலச்சிக்கலை குணப்படுத்தும்

சப்ஜா விதையில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதனால் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மூல நோய் குணமாகும்

மூல நோயினால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும்.

மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.

உடல் எடையை குறைக்கும்

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க இது பெருமளவு உதவுகின்றது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறிய சப்ஜா விதையை குடித்து வந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதுடன் உடல் எடையும் குறையும்.

அதுமட்டுமின்றி சப்ஜா விதையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வரலாம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மையும் சப்ஜா விதைக்கு உண்டு.

சக்கரையின் அளவை குறைக்கும்

உடலில் சக்கரையின் அளவை குறைக்க விரும்புவோர் தினமும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடலில் சக்கரையின் அளவு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கிடைக்கும்.

இரத்த சோகை

சப்ஜா விதையில் அதிகளவு இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும்.

நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி

நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள் இரவில் ஊறவைத்த சப்ஜா விதையினை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு சப்ஜா விதை தீர்வாக அமையும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் சப்ஜா விதையினை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கம் பெருமளவு குறையும்.

சப்ஜா விதை எப்படி சாப்பிட வேண்டும்

சப்ஜா விதைகளை சுமார் 6 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் என்றால் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையிலும் பயன்படுத்தலாம்.

ஊற வைத்த சப்ஜா விதையினை பார்க்கும் போது ஜவ்வரிசி போன்று இருக்கும். இதனை பால், தண்ணீர், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் சேக் போன்ற எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.

இந்த சப்ஜா விதையை தண்ணீரில் ஊற வைத்தே சாப்பிட வேண்டும். இதனை வெறுமனே சாப்பிடும் போது வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படும்.

சப்ஜா விதை எங்கு கிடைக்கும்

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் இலகுவாக கிடைக்கக் கூடியது.

சப்ஜா விதை ஆங்கிலத்தில்

Basil Seeds” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

சப்ஜா விதை தீமைகள்

பல நன்மைகளை தரக்கூடிய சப்ஜா விதையில் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றது.

சப்ஜா விதையினை தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது வயிறுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது செரிமான பிரச்சனை மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பசியின்மையை ஏற்படுத்தும் இதனால் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறையும்.

உடலில் சக்கரையின் அளவை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு எனவே சக்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் சப்ஜா விதையை தொடர்ந்து சாப்பிடும் போது இது உடலில் மேலும் சக்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

சப்ஜா விதை யார் சாப்பிடக்கூடாது

கர்ப்பிணிப் பெண்கள் சப்ஜா விதையினை சாப்பிடும் போது கரு கலைவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு.

அறுவை சிகிக்சை செய்தவர்களும் செய்ய இருப்பவர்களும் இந்த சப்ஜா விதையினை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இது உடலுக்கு அதிகளவு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. அதனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

சிறு குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சப்ஜா விதையினை தவிர்ப்பது சிறப்பானது.

You May Also Like:

கபசுர குடிநீர் காய்ச்சுவது எப்படி

பூனைக்காலி விதை பொடி பயன்கள்