சபாநாயகர் என்றால் என்ன

sabanayagar in tamil

இந்தியாவின் உயர் பதவிகளில் சபாநாயகர் பதவியும் முக்கிய பதவியாக உள்ளது. இந்தியாவின் தலைமை சிற்பிகளில் ஒருவரும் அதன் மக்களாட்சி அரசமைப்பு தத்துவத்தில் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் “ஜவஹர்லால் நேரு” ஆவார்.

ஜவஹர்லால் நேரு இந்திய சபாநாயகரின் அலுவலகத்தை குறித்து கூறியதாவது “சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கின்றார். அவர் இந்த மன்றத்தின் மாண்பும் மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகின்றார். இந்த மன்றம் நாட்டின் சின்னமாக விளங்குவதால் ஒரு குறிப்பிட்ட வகையில் சபாநாயகர் இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமாக திகழ்கின்றார்.

ஆகவே அது ஒரு மேன்மை தாங்கிய சுதந்திரமான பதவியாக இருக்க வேண்டும். அப்பதவி எப்போதும் மிகத் திறமை வாய்ந்த மற்றும் பாரபட்சமற்ற ஒருவரால் வகிக்கப்பட வேண்டும்” எனக்கூறினார்.

சபாநாயகரின் பணிகள் மற்றும் பொறுப்புகள்

சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில், லோக்சபாவில் சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள் பல உள்ளன.

மக்களவை தலைமை தாங்கிய நடத்துபவரான சபாநாயகரானவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமைகளாகும்.

உறுப்பினர்கள் பொருத்தமான நடைமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது, உறுப்பினர்களைக் கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிப்பது, அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது மற்றும் ஆட்சேபனைக்குரிய குறிப்புக்களைப் பதிவேட்டில் இருந்து நீக்குவது போன்றவை சபாநாயகரின் கடமைகளாகும்.

சபாநாயகரின் அதிகாரங்கள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நிகராக சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அவைகளின் வழிமுறைகள் மற்றும் விதிகளை உதாசீனப்படுத்தும் அல்லது மீறும் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

ஒரு திருத்தச் சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும். அந்தத் திருத்தச்சட்ட முன்வரைவை அனுமதிப்பதா இல்லையா என்பதனை சபாநாயகர் தீர்மானிப்பார்.

மன்றத்தின் உரிமைகள் சிறப்புரிமைகள் மற்றும் கலந்தாய்வுக்குழு மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரின் உரிமைகளின் பாதுகாவலராக செயற்படுவார்.

சிறப்புரிமை குறித்த எந்த விளக்கமும், வேண்டிய ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் மற்றும் அறிக்கை அளிக்கவும் உரிமைக் குழுவுக்கு பரிந்துரைப்பது சபாநாயகரின் மற்றுமொரு முக்கிய அதிகாரமாகும்.

உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், அளிக்கும் பதில்கள் விளக்கங்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் சபாநாயகரை நோக்கியே இருக்க வேண்டும்.

அவை ஒழுங்கு பிரச்சனை குறித்த தோல்விகளுக்கு சபாநாயகரே இறுதி முடிவெடுப்பார். அரசமைப்பின் சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார்.

சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடருக்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார்.

Read more: இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்

அரசியல் என்றால் என்ன

அரசியலமைப்பு என்றால் என்ன