Table of Contents
சந்திராஷ்டமம் என்றால் என்ன
சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் காலம் ஆகும்.
சந்திராஷ்டமம் எனப்படுது சந்திரனுடைய தோற்றமானது மறைக்கப்படுவதனால் மனதின் எண்ணங்கள், தெளிவு போன்ற விடயங்கள் மறைக்கபபடுதலை குறிக்கின்றது. காலம் கடந்து ஒரு விடயத்தை சிந்திக்க வைப்பதுவே இதன் வேலையாக உள்ளது.
பொதுவாகவே சந்திரனை “மனோகாரகன்” என்றும் அழைப்பதுண்டு அதாவது சந்திராஷ்டமத்தை நாம் பாரத்ததால் மனதில் குழப்பங்கள் தோன்றும் என்பது சாஸ்த்திரங்களின் கருத்து.
சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை
பொதுவாகவே சந்திராஷ்டமம் காலங்களில் பிரயாணம் பண்ணுவது கூடாது என்று சொல்லப்படுகின்றது. மனநிலை தெளிவாக இருந்தால் தான் பயணங்கள் இனிதாக அமையும் என்பதனால் இக்காலத்தில் மனதில் பல சஞ்சலங்கள் தோன்றும் என்பதனால் இக்காலத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுந்திரன் சஞ்சாரகாரகனாக இருப்பதனால் பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த காலத்தில் ஒருவர் இல்லாதபோது அவரை பற்றி தவறான வாரத்தைகளை நாம் பேசி விடக்கூடாது. இது உள்ளொன்று வைத்து வெளியே ஒன்றை பேசுவது அவர்களுக்கு மிகுந்த கெடுதல்களை ஏற்டுத்தும் ஆகையால் இவ்வாறான தவறான செயல்களை இத்தினத்தில் செய்யக்கூடாது.
மனிதர்களை பொறுத்தவரையில் வாழக்கையில் சில முக்கியமான தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி நேரிடும். முடிவுகள் அவர்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதனால் இக்காலத்தில் அம்முடிவுகளை எடுக்க கூடாது. ஏன் என்றால் முடிவுகள் மனதில் இருந்து எடுக்கப்படுவதனால் இக்காலத்தில் மனமானது சஞ்சலமாக காணப்படுவதனால் முடிவுகளை எடுக்க கூடாது என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் சந்திரனுடைய தோசத்தினால் மனிதர்களது மூளையானது சோர்வடைந்து காணப்படுவதனால் செய்கின்ற வேலைகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாத நிலையானது காணப்படும். இதனால் தவறுகள் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளது எனவே இக்காலத்தில் முக்கிய வேலைகளை செய்வதனை தவிர்த்து கொள்ளது நல்லதாகும்.
இவ்வாறான சில தடங்கல்கள் பின்னடைவுகள் இந்த காலத்தில் காணப்படுவது இயற்கையான ஒன்றாகும் இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. அனால் இவற்றை தவிர்க்க மிகுந்த கவனத்துடன் செயலாற்றுதல் முக்கியமான ஒன்றாகும். மற்றும் இறைவனை நன்றாக வழிபட்டு தமது காரியங்களை ஆற்றுவதன் மூலம் இதன் பாதிப்புக்களை எம்மால் குறைத்து கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் அன்று செய்ய வேண்டியவை
தினத்தில் செய்கின்ற காரியங்களில் நிதானமாகவும் மிகுந்த அவதானத்தோடும் இருப்பது நல்லது இதனால் காரியங்கள் தடைப்படாது. மேலும் இத்தினத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்த விடயமாகும்.
எந்த ஒரு தடங்கலான சூழ்நிலைகளிலும் மன அமைதியோடும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பதனால் பல காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
இந்த தினத்தின் தோசங்களை தவிர்க்க சில இறை வழிபாடுகள் செய்வதை முன்னோர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அவையாவன பிறைசூடிய இறைவனான சிவபெருமானை வழிபடுவது மிகுந்த பலனை தரும் என கூறப்படுகின்றது.
You May Also Like : |
---|
செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை |
அஷ்டமி அன்று செய்ய கூடாதவை |