சகாப்தம் என்றால் என்ன

sagaptham in tamil

காலச் சக்கரம் என்பது அதிசயமான பொருள் எனலாம். 24 மணி நேரத்தைக் கொண்ட சிறிய சுற்றுதல் உள்ள சக்கரமும் உண்டு. ஏழு நாளைக்கு ஒரு முறை சுற்றி முடிக்கும் வாரச் சக்கரமும் உண்டு.

இருபத்தி ஒன்பதரை நாட்களில் ஒரு சுற்று முடியும் மாதச் சக்கரமும் உண்டு. முன்னூற்று அறுபத்து நான்கு நாட்களில் சுற்றி முடியும் ஆண்டுச் சக்கரமும் உண்டு. இவ்விதம் இதைவிடப் பெரிய சகாப்தச் சக்கரமும் உண்டு.

ஒரு தருணத்தில் இவ்வுலகில் பிறக்கும் மனிதன் ஒரு தருணத்தில் இவ்வுலகில் இருந்து விடை பெற்று செல்கின்றான். இக்கால பகுதியில் மனிதன் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றான். இதன் மூலம் காலம் மனிதனின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ளது எனலாம்.

இத்தகைய காலத்தை நாம் நிமிடம், மணித்தியாலம், நாள், வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு, தசாப்தம், சதாப்தம், சகாப்தம் போன்ற அலகுகளின் மூலம் அளவிடுகின்றோம்.

சகாப்தம் என்றால் என்ன

சகாப்தம் என்பது நீண்டகால காலத்தைக் கொண்டதாகும். அதாவது சகாப்தம் என்பது ஆயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி ஒரு சகாப்தம் எனப்படுகின்றது.

கி.பி ஒன்று முதல் கிபி ஆயிரம் வரை ஆன காலப்பகுதி முதலாம் சகாப்தம் எனப்படும். கி.பி 1001 முதல் கி.பி 2000 வகையான காலப்பகுதி இரண்டாம் சகாப்தம் எனப்படும். கி.பி 2001 முதல் கி.பி 3000 வரை ஆன காலப்பகுதி மூன்றாம் சகாப்தம் எனப்படும்.

சாலிய வாகன சகாப்தம்

இந்திய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி சாலிய வாகன சகாப்தம் ஆகும். இது 1947 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.

சாலிவாகனன் என்று மன்னர் ஆண்டு 1942 வருடங்கள் கழிந்து விட்டது என்பது பொருளாகும். சாலிவாகன ஆண்டு கி.பி 78 முதல் தொடங்குவதாக உள்ளது.

1840களில் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள சின்னநகமம் எனும் இடத்தில் பாளையக்காரர்கள் என்பவர்கள் ஆட்சி செய்தனர்.

அவர்கள் செதுக்கிய கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1762 என்றும் கலியுக சகாப்தம் 4941 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கல்வெட்டானது கி.பி 1840 இல் செதுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

இதே போல் தஞ்சாவூரைப் பிரதாபசிம்மன் என்னும் மன்னன் 1739 முதல் 1769 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் ஒரு மராட்டிய மன்னன் ஆவான். இவனுடைய கல்வெட்டில் கலியுக ஆண்டு 4854 என்றும் சாலிகவாகன ஆண்டு 1674 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சாலிகவாகனம், கலியுகம் என்ற இரண்டுமே முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இவற்றைச் சான்றாகக் கொள்ளலாம்.

Read more: சித்திரை மாத சிறப்புகள்

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி