கோபம் வேறு சொல்

கோபம் வேறு பெயர்கள்

கோபம் வேறு சொல்

கோபம் என்பது மனிதர்களிடம் ஏற்படும் ஒரு கடுமையான உணர்வு ஆகும். மனிதருக்கு மட்டும் அல்ல கடவுளுக்கே கோபம் உண்டென புராணங்கள் கூறுகின்றன.

உதாரணமாக கோபத்தில் சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை எரித்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

கோபம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு உணர்ச்சியாக நம் அறிவிலும், உடலிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.

கோபத்தின் வெளிப்பாடுகளை முக பாவனைகள், உடல் மொழி, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் போன்றவை மூலம் கண்டறியலாம்.

கோபத்தினால், பிறர் செய்த தவறுக்காக நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம்.

நண்பர்களுக்கிடையேயான சண்டை, இரு பிரிவினர்களிடையே மோதல், கலவரம், பழிவாங்கும் உணர்வு, கொலை, ஆயுள் வரை பகை, போர் எல்லாம் கோபத்தின் வெளிபாடுகளே ஆகும்.

சமூகப் பிராணியான மனிதன் கோபத்தை குறைத்துக் கொள்வது சிறப்பு. அதனாலேயே பாரதியார் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் ‘ரௌத்திரம் பழகு’ என்றார்.

கோபம் இரு அடுக்குகளைக் கொண்டது. ஒன்று பிறர் மேலுள்ள கோபம். அது பல வழிகளிலும் வெளிப்பட்டு விடும்.

இன்னொன்று தன் மீதே உள்ள கோபம். தன்னிரக்கம், மனச்சோர்வு, அடிபட்ட தன்மை போன்றவை இவ்விதக் கோபத்துக்குக் காரணங்கள் ஆகின்றன. தன் மீதே உள்ள கோபத்தில் சிலர் தற்கொலை வரை போவதும் உண்டு.

கோபம் என்ற தீய பண்பை நாம் தவிர்த்து வாழ்வது நன்மையளிக்கும் அதாவது நல்ல வாழ்விற்கு வித்திடும்.

கோபம் வேறு சொல்

  • ஆத்திரம்
  • சினம்
  • ஆக்ரோஷம்
  • அகங்காரம்
  • வெகுழி
  • ஆவேசம்
  • சீற்றம்
  • சினம்
  • மூர்க்கம்
  • முனிவு
  • ரௌத்திரம்
  • குரோதம்

Read more: ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்

தூக்கம் வர எளிய வழிகள்