கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்

cholesterol reducing foods in tamil

இந்த பதிவில் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் பற்றி அறியலாம்.

கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உண்டு.

  • HDL (நல்ல கொலஸ்ட்ரால்)
  • LDl (கெட்ட கொலஸ்ட்ரால்)

நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது தான் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றோம்.

  • உடல் எடை அதிகரித்தல்
  • இதய நோய்கள்
  • இரத்த குழாய் அடைப்பு
  • மாரடைப்பு

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சாப்பிடும் உணவுகள் சமிபாடடையவும் உணவில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்படுவதையும் தடுக்கின்றது.

இதன் மூலமாக உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படுகின்றது.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளான கீரை வகைகள், கோவை மற்றும் பீன்ஸ் இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்து வர உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

கீரை வகைகளில் பசளிக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எலுமிச்சை

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

கெட்ட கொழுப்பை கரைப்பதில் எலுமிச்சை சிறந்து விளங்குகின்றது.

மீன்கள்

இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை.

இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

அவகோடா

அதிக நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-டநிறைந்துள்ள பழம் அவகோடா. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பினை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டு

பூண்டில் அலிசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருள் நிறைந்திருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் அதிகளவு பூண்டு சேர்த்துக் கொள்வது சிறந்தது.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் ஆன்டி ஒக்ஸிட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இரத்த குழாயில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை இலகுவாக கரைக்கலாம்.

தேன்

தினமும் ஒரு கரண்டி தேன் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க முடியும்.

ஒலிவ் ஆயில்

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இருதய பிரச்சனைகள் உள்ளவர்கள் சமைக்கும் எண்ணெயில் ஒலிவ் ஆயில் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை அடையலாம்.

ஒலிவ் ஆயிலில் கொலஸ்ட்ராலை கரைக்கும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இருதயத்திற்கும் சிறந்த நன்மை தருகின்றது இந்த ஒலிவ் ஆயில்.

பீன்ஸ்

தினமும் உணவுகளில் பீன்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்.

இயற்கையாக முடி கருமையாக