கொத்தடிமை முறை ஒழிப்பு கட்டுரை

கொத்தடிமை முறை ஒழிப்பு கட்டுரை

தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கொத்தடிமை முறையை இன்றளவும் நடைமுறையில் வைத்திருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் கொத்தடிமை முறை ஒழிப்பு மாநாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

கொத்தடிமை முறை ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம்
  • பங்களிப்புக் காரணிகள்
  • வேலையில் நிர்ப்பந்தம்
  • ஒழிக்கும் வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

கொத்தடிமை முறை என்பது பணத்திற்காக ஒரு குடும்பமோ அல்லது ஊரோ தலைமுறை தலைமுறையாக பணம் உள்ளவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பது ஆகும்.

உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொத்தடிமை முறைக்கு எதிராக அதிகளவில் குற்றச்சாட்டுகள் வெளியுலகத்திற்கு வருவதில்லை. மேலும் கடுமையான தண்டனைகள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்பவருக்கு வழங்கப்படுவதில்லை இதனால் தான் இக்குற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம்

கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக இந்தியாவில் 1976 இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொறுப்பையும் அதிகாரத்தையும் மாவட்ட ஆட்சியர் மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்குவதற்கு மாநில அரசுக்கு இந்த சட்டமே அதிகாரமளிக்கிறது.

இதன்படி மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொத்தடிமைகளுக்கு உடனடியாக 1,000 ரூபாவும் அடுத்ததாக 19,000 ரூபாவும் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மறுவாழ்வுக்காக வேளாண் நிலமும் அளிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.

பங்களிப்புக் காரணிகள்

நெடுங்காலத்திற்கு முன்பே தெற்காசியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டிய வரலாற்றுச் சரித்திரமே கொத்தடிமைத்தனம் ஆகும்.

ஆனால் பேராசை, ஊழல், அரசாங்கத்தின் திறனின்மை ஆகியவை நவீன காலத்திற்குள் இந்த கெட்ட சுரண்டலை அனுமதிக்கின்றன.

அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் உலகளாவிய விநியோகத் தொடர்களை உத்தரவாதப்படுத்துவதும் சர்வதேச பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் கொத்தடிமைகளை ஊக்கிவிக்கும் சக்திகளை உடனடியாக தடுக்க வேண்டும்.

வேலையில் நிர்ப்பந்தம்

மாற்று வழிகளுக்கான விருப்பத்தேர்வை ஒரு நபரிடமிருந்து பறிக்கின்ற மற்றும் ஒரு குறிப்பிட்ட செயல் நடவடிக்கையை பின்பற்றுமாறு அவரை கட்டாயப்படுத்துகிற எந்தவொரு காரணியும் நிர்ப்பந்தம் என்று முறையாக கருதப்படலாம்.

மற்றும் வேலை அல்லது சேவை என்பது அத்தகைய விளைவாக கட்டாயப்படுத்தப்படுமானால் அது கட்டாய நிர்ப்பந்த பணி எனப்படும்.

ஒழிக்கும் வழிகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்தடிமை முறை இருக்கும் தொழில்கள் மற்றும் பகுதிகளை இனங்காண வேண்டும்.

இதனடிப்படையில் இவர்களின் மறுவாழ்விற்கு பல்துறை இணைந்து ஒருங்கிணைந்த ஒரு விரிவான செயல் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும்.

விடுவிப்புச் சான்று வழங்கும் அதிகாரத்திலுள்ள அனைவருக்கும் முறையான பயிற்சி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அவர்களுக்கு உரிய பங்கு குறித்து விளக்க வேண்டும்.

மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் மற்றும் திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

முடிவுரை

கோவிட் ஏற்படுத்திய தாக்கத்தால் உருவான பொருளாதாரச் சீரழிவு இன்னும் சரியாகாத இந்த அசாதாரணமான சூழலில் கொத்தடிமை அதிகரிக்க வாய்ப்புகள் பல உள்ளன.

ஆகவே கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து ஒரு விரிவான செயல்திட்டத்தை செயல்படுத்தி கிராம அளவில் கண்காணிப்பினை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

எனவே இதற்கான வசதிகளை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Read more: போதை இல்லா உலகம் கட்டுரை

மனித உரிமைகள் என்றால் என்ன