ஒரு நாட்டின் வளர்ச்சிச் செல்வங்களான குழந்தைகள் தொழிலாளர்களாக இருப்பது உலகின் மிகப்பெரும் சோகமாகும். ஒரு நாடு நிறைவுடன் திகழ்வதற்கு குழந்தைகள் எனும் அரும்புகள் பேணப்பட வேண்டும்.
குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது பரவலாக எல்லா நாடுகளிலும் இடம் பெறுகின்றன. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் குழந்தை தொழிலாளர்கள் உருவாக்குவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. குழந்தை தொழிலாளர்கள் உருவாகுவதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன அவற்றை இந்த பதிவில் காணலாம்.
குழந்தை தொழிலாளர் உருவாக காரணம்
#1. வறுமை
குழந்தை தொழிலாளர்கள் உருவாகுவதற்கு முதன்மைக் காரணியாக வறுமை காணப்படுகின்றது. ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தின் பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்வதற்காக குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
தீராத வறுமையை சமாளிக்கவும், தீர்க்க முடியாத கடனை அடைக்கவும் பெற்றோர்கள் வேறுவழியின்றி குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.
#2. திட்டமிடப்படாத குடும்பம்
இன்று சமுதாயத்தில் அதிகளவாக இளவயது திருமணங்களைக் காணமுடிகின்றது. நிலையான தொழிலோ அல்லது நிலையான வருமானமோ இல்லாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கான திட்டமிடல் இன்மையால், குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
#3. கல்வியறிவின்மை
அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்பதென்பது பாரிய சவாலாகவுள்ளது. இத்தகைய நிலையானது சமூகத்தில் கல்வியறிவின்னைக்கு ஓர் காரணமாகின்றது.
இதனால் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தொடர்பான விழிப்புணர்வற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு சமுதாயம் கல்வியறிவு பெற்றுவிட்டால் குழந்தை தொழிலாளர்கள் பற்றி போதிய அறிவு வந்துவிடும்.
#4. ஆதரவற்ற குழந்தைகள்
சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த குழந்தைகள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள், தவறான உறவினால் பிறந்த குழந்தைகள் போன்ற காரணங்களால் குழந்தைகள் அனாதையாகத் திரியும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலை அவர்கள் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
#5. பெற்றோரின் பேராசை
சில பெற்றோர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் தமது குழந்தைகளை வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
#6. முதலாளிகளின் மனிதநேயமின்மை
வேகமாக வளர்ந்து வரும் நாகரீக உலகத்தின், அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனங்களுக்கு மலிவான மனித உழைப்பு தேவைப்படுகிறது.
அது குழந்தை தொழிலாளர் வடிவில் இலவசமாகவே கிடைக்கிறது. குழந்தைகளின் ஆற்றலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேலைப் பளுவை திணித்து மனிதநேயம் இன்றி தமது சுய லாபத்திற்காக வேலை வாங்குகின்றனர்.
#7. குழந்தைக் கடத்தல்
உலகின் இருண்ட அறைக்குள் பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்ட குழந்தை கடத்தல். மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தை தொழிலாளராக விற்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் பெரு நகரங்களில் சிறு விலைகளுக்கு விற்கப்படுகின்றார்கள். அக்குழந்தைகள் போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், போன்ற பல தொழில்களுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.
#8. தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகள்
சமூகத்திலுள்ள பாகுபாட்டால், குழந்தைகள் பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. பள்ளியில் இடைநிற்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் பள்ளியில் இடை நிற்கும் குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
#9. சமூகத்தில் உள்ள மதுபாவனை
வீதிக்கு வீதி மலிவாகக் கிடைக்கும் மது, குழந்தைகளின் போக்கை மாற்றி அவர்களைக் குற்றவாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமது மதுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வேலைக்கு செல்கின்றனர்.
#10. கொத்தடிமை முறை.
ஆலை உரிமையாளர்களிடம் பெற்றோர்கள் வாங்கிய கடனுக்காக பெற்றோர்களுடன் குழந்தைகளையும் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
You May Also Like : |
---|
கல்வியின் பயன்கள் |
ஜனநாயகத்தின் முக்கியத்துவம் |