இந்த பதிவில் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்றான “கிவி பழம் நன்மைகள்” பற்றி காணலாம்.
கிவி பழம் சீனா மற்றும் தைவான் நிலப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது ஆகும். இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது. இதற்கு சீனத்தின் நெல்லிக்காய் என்றும் பெயர் உண்டு. கிவி பழத்தின் அறிவியல் பெயர் ஆக்டினிடியா டெலிகியோசா ஆகும்.
கிவி பழம் நன்மைகள்
1. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கிவி பழத்தில் உள்ள ஆக்டினிடின் எனும் என்சைம் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உடலை சீராக வைத்திருப்பதற்கும் நார்ச்சத்து அவசியம் ஆகும். பச்சை கிவி பழத்தில் குறிப்பாக ஆக்டினிடின் எனப்படும் இயற்கை செரிமான நொதி உள்ளது. இது புரதத்தை உடைத்து இரைப்பை மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கிவி பழத்தில் நிறைய பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கிவி பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. ஒரு கப் கிவி பழ சாறில் 273 சதவிகிதம் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
4. கிவி பழம் இரத்த அழுத்த அளவுகளை குறைத்து, அவற்றை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
5. நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். உறங்குவதற்கு முன் கிவி பழத்தை உண்டால், அது நல்ல உறக்கத்தை அளிக்கும். மற்றும் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.
6. கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. கிவி பழத்தில் போலேட் எனும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கற்பிணிகளுக்கு பலன் அளிக்கக் கூடியதாகவுள்ளது.
7. ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும். கிவி பழத்தில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி, ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றது. கிவி பழங்கள் சுவாச குழாய் அதாவது மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுத்து, அவற்றின் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகின்றன.
8. வயிற்றில் ஏற்படும் அல்சர் குறைபாட்டைச் சரி செய்ய உதவுகின்றன. கிவி பழத்தில் காணப்படும் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் வயிற்றில் ஏற்படும் அல்சர் குறைபாட்டை சரி செய்ய உதவுகின்றன.
9. வைட்டமின் சி சத்து, புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வாய் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் தேவையற்ற செல்களை எதிர்த்து போராட உதவுவதோடு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
10. கண்களில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதாவது கிவி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி, ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் கண்பார்வையை சீராக்கும்.
11. பக்கவாதம், மாரடைப்பு, இதர சரும பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கறைகள், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்க கிவி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் பெரிதும் உதவுகின்றன. கிவியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். இது திசுக்களை இணைத்து, சருமத்தை பலமாக வைக்க உதவுகிறது.
12. முடி உதிர்வு, பொடுகு, உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை கூந்தலில் ஏற்படும் இப்பிரச்சனைகளை போக்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
You May Also Like: |
---|
வேப்ப எண்ணெய் பயன்கள் |
இலந்தை பழத்தின் நன்மைகள் |