காந்தி ஜெயந்தி என்றால் என்ன

gandhi jayanti in tamil

காந்தி ஜெயந்தி என்றால் என்ன

மகாத்ம காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் இடத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிறந்தார். இவரது முழுப்பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும்.

இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்திலிபாய் ஆகும். காந்தியடிகளின் தாய் மொழி குஜராத்தி காந்தி தனது 13வது வயதிலேயே கஸ்தூரியை திருமணம் செய்து கொண்டார் காந்திஜி லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

நமது இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட நமது இந்தியாவின் “தேசத் தந்தை” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் மகாத்மா காந்தி ஆவார்.

காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அனைத்து மதத்தினரும் வாழும் நமது இந்திய நாட்டில் கொண்டாடப்படும் தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் காந்தி ஜெயந்தி கருதப்படுகின்றது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் காந்தி அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக கலைப் பிரியர்கள் காந்தியைப் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

இந்நாளில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். பள்ளிகளில், கல்லூரிகளில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்பவர் காந்தி. அகிம்சை மற்றும் சத்தியாகிரக வழிகளைப் பின்பற்றி நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததால் இவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்தி பெற்றவர்.

காந்தி என்ற ஒற்றை சொல் நமக்கு விளக்கும் பாடம் அகிம்சை மட்டுமே ஆகும். காந்தி ஜெயந்தியன்று புதுடெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜகார்ட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் நடத்தப்படுகின்றன.

காந்தியின் விருப்பமான பஜனைகள் பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகின்றது. அகிம்சை மற்றும் சத்தியாக்கிரகம் என்றால் நம் நினைவில் வருபவர் காந்திதான்.

காந்தி அவர்களின் 70ஆவது பிறந்த தினத்தின்போது வன்முறையும் ரத்தக்கறை படிந்த இந்த பூமியில் இத்தகைய மனிதர் வாழ்ந்தார் என்பதனை வரும் தலைமுறைகள் நம்புவதற்கு கடினம் என்று புகழாரம் சூட்டி இருந்தார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன்.

மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவது அல்லது இறைச்சி உண்பதை தவிர்க்கின்றனர்.

காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம் அக்டோபர் 2-ம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது. காந்தியின் அறவழியில் சென்று நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்.

காந்தி ஜெயந்தி என்றால் என்ன

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் திகதியை குறிக்கும் நளாகும். இத்தினம் ஆண்டு தோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Read more: மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை